மேட்ச் பிக்ஸிங்: சிபிஐ அறிக்கையில் அசார், ஜடேஜா, சர்மா, பிரபாகர்
டெல்லி:
மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக விசாரணை நடத்திய மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அறிக்கையில்4 இந்திய வீரர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
முதன்முதலில் மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகளைக் கூறிய மனோஜ் பிரபாகர், இந்திய அணியின்முன்னாள் கேப்டன் முகம்மது அசாருதீன், அஜய் ஜடேஜா, அஜய் சர்மா ஆகியோரது பெயர்கள்சிபிஐ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ், தி ஸ்டேட்ஸ்மென்பத்திரிக்கைகளில் ஒரே மாதிரி செய்தி வெளியாகியுள்ளது.
இலங்கையில் சிங்கர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டபோது எனக்கு ரூ. 25 லட்சம்லஞ்சம் தர கபில் தேவ் முயன்றதாக மனோஜ் பிரபாகர் முதன் முதலாக குற்றம் சாட்டினார்.
இக் குற்றச்சாட்டை கபில் தேவ் மறுத்தார். ஆனால், தான் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாகஆவணங்களையும், விடியோ கேசட்டுகளையும் பிரபாகர் சமர்ப்பித்தார்.
தன் மீது கூறப்பட்ட புகார்களை அடுத்து இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியையும் கபில்தேவ்ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக விசாரணை நடத்தும்படி சிபிஐக்கு மத்திய அரசுஉத்தரவிட்டது. மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும்கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் பலரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
தற்போது விசாரணையை நடத்தி முடித்துள்ள சிபிஐ, சுமார் 210 பக்கம் அளவுக்கு விசாரணைஅறிக்கையை தயாரித்துள்ளது. இந்த விசாரணை அறிக்கை விரைவில் மத்திய விளையாட்டுத் துறைஅமைச்சர் எஸ்.எஸ். தீன்ஷாவிடம் ஒப்படைக்கப்படும். அவர் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில்சமர்ப்பிப்பார்.
இந் நிலையில், சிபிஐ விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய தகவல்களை இருபத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளன.
மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக அசாருதீன், பிரபாகர், ஜடேஜா, அஜய் சர்மா ஆகியோரதுபெயர்கள் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. அதே நேரத்தில் பிரபாகர் புகார் கூறிய கபில்தேவின் பெயர் அதில் இல்லை.
கபில் தேவ் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அறிக்கையில்கூறப்பட்டுள்ளதாக பத்திரிக்கைகளின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள 4 இந்திய வீரர்களுடன் 10-க்கும் அதிகமான கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள்நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்ததாக சிபிஐ தனது விசாரணைஅறிக்கையில் கூறியுள்ளது.
அஜய் சர்மாவும், மனோஜ் பிரபாகரும்தான் இந்திய கிரிக்கெட்டுக்கு அழியாத களங்கத்தைஏற்படுத்தியுள்ளனர். இருவரும் கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுடன் நெருங்கிய தொடர்புவைத்துள்ளனர்.
உள்ளூர் சூதாட்டக்காரர்களுடன் அஜய் சர்மாவும், வெளிநாட்டு சூதாட்டக்காரர்களுடன் மனோஜ்பிரபாகரும் தொடர்பு வைத்துக் கொண்டுள்ளதாக விசாரணை அறிக்கையில் சிபிஐகூறியுள்ளதாகஅப் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுடன் ஒரு நாளைக்கு 60 முறைக்கு மேல் செல்போன் மூலம் அசாருதீன்பேசினார் என்றால், மற்றொரு நாள் 50 முறைக்கு மேல் அஜய் ஜடேஜா பேசியுள்ளார். அந்தஅளவுக்கு அவர்களுக்கும் சூதாட்டக்காரர்களுக்கும் தொடர்பு இருக்கிறது.
மேட்ச் பிக்ஸிங்கில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சிலருக்கும் தொடர்புஉண்டு என்று தனது அறிக்கையில் சிபிஐ கூறியுள்ளதாக அப் பத்திரிக்கைகளில் செய்திவெளியாகியுள்ளது.
பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுடனான ஒரு நாள் கிரிக்கெட்போட்டிகள் பிக்ஸ் செய்யப்பட்டதாக சிபிஐ தனது அறிக்கையில் கூறியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications