பாபர் மசூதி: பா.ஜ.கவுக்கு டெல்லி புதிய இமாம் கேள்வி
டெல்லி:
முஸ்லீம்களை தன் பக்கம் இழுக்க முயற்சிக்கும் பாரதீய ஜனதா சில கேள்விகளுக்கு முதலில்பதிலளிக்க வேண்டும் என டெல்லி ஜூம்மா மஸ்ஜீதின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஷாகிஇமாம் சையத் அகமத் புகாரி கூறினார்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை பா.ஜ.க. பெருமையாகக் கருதுகிறதா இல்லை அதுஒரு வெட்கக்கேடான சம்பவம் எனக் கருதுகிறதா என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும்என்றார்.
இவரது தந்தை சையத் அப்துல்லா புகாரி தான் இதுவரை ஜூம்மா மசூதியின் தலைவராக இருந்துவந்தார். இப்போது மகன் நியமிக்கப்பட்டுள்ளாார். தலைவரான பின்னர் அவர் நிகழ்த்திய முதல்உரையைக் கேட்க 7,000 பேர் கூடியிருந்தனர். இவர் ஜூம்மா மசூதியின் 13வது ஷாகி இமாம்ஆவார். இவரது கருத்துகளுக்கு இந்திய முஸ்லீம்களிடம் ஓரளவுக்கு செல்வாக்கு இருந்து வருகிறது.
அவர் பேசுகையில், ஆட்சியைப் பிடிப்பதற்காக முஸ்லீம்களை கட்சிகள் ஓட்டு வங்கிகளாகபயன்படுத்துகின்றன. மக்களிடையே பகைமையை வளர்த்தது பா.ஜ.க. தான். இப்போது இந்தபகையை மறையச் செய்ய வேண்டிய கடமையும் பா.ஜ.கவுக்கு உள்ளது.
ஒவ்வொரு இந்திய முஸ்லீமையும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. ஏஜெண்ட் போல சந்தேகத்துடன்பார்க்கச் செய்திருக்கிறது பா.ஜ.க. அரசு. மசூதிகளையும், இஸ்லாமிய கல்வி நிலையங்களையும் கூடஐ.எஸ்.ஐ. மறைவிடங்களாக பார்க்கச் செய்துள்ளார்கள்.
எங்களை அரசு தேவையில்லாமல் குறி வைக்கிறது. வாழும் நாட்டுக்கு துரோகம் செய்ய இஸ்லாம்அனுமதிக்காது. நாட்டுக்கு துரோகம் செய்பவன் இஸ்லாத்துக்கு விரோதமானவன். பாகிஸ்தான் தவறுசெய்கிறதென்றால் அதை நாங்கள் கண்டிக்கிறோம். இந்திய முஸ்லீம்களுக்கு கெட்ட பெயர் வாங்கித்தரும் பாகிஸ்தானை கண்டிக்கிறோம்.
இது தொடர்பாக பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பிடம் பேசவும் தயாராகவே இருக்கிறேன்என்றார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்












Click it and Unblock the Notifications