சிறையில் இருந்து கொண்டு முஷாரப்பை மிரட்டும் ஷெரீப்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் தற்போது ஆட்சி நடத்தி வரும் ராணுவத்துக்கு எந்த பாதிப்பும்இல்லாமல் வழியனுப்பு விழா நடத்த பாகிஸ்தான் முஸ்லீம் லீக் தயாராக உள்ளதுஎன்று அக் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டு, சதி, விமானக் கடத்தல் போன்ற குற்றங்களுக்கான ராணுவஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் தலைமையிலான ராணுவ ஆட்சியால் பல ஆண்டுகள்தண்டனை விதிக்கப்பட்டவர் நவாஸ் ஷெரீப்.
தற்போது அட்டாக் போர்ட் என்ற இடத்தில் உள்ள சிறையில் அவர்அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் பேட்டி எடுப்பதற்காக பி.பி.ஐ. செய்தி நிறுவனம்முயன்றனர்.
ஆனால், அவரிடம் நேரடியாக பேசுவதற்கு அரசு அனுமதி மறுத்துவிட்டது.இதையடுத்து நவாஸ் ஷெரீப்புக்கு கேள்விகளை அனுப்பி பதில் பெற அச் செய்திநிறுவனம் முடிவு செய்தது. அதன்படி தன்னிடம் அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு தனதுவழக்கறிஞர் சலீம் ஸியா மூலம் நவாஸ் ஷெரீப் பதில் தெரிவித்துள்ளார்.
அதன் விவரம்:
பாகிஸ்தானில் முஷாரப் அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். தேசியஒருமைப்பாடு சீரழிந்துவிட்டது. எந்த வகையிலும் ராணுவ ஆட்சியுடன் பாகிஸ்தான்முஸ்லிம் லீக் தொடர்பு வைத்துக் கொள்ளாது.
ஆனால், ஜனநாயக மாண்பைக் காக்க ராணுவ ஆட்சியுடன் பேச்சு நடத்த பாகிஸ்தான்முஸ்லீம் லீக் தயாராக உள்ளது. மக்களின் விரோதத்தை ராணுவம் சம்பாதித்துள்ளது.
புதிய தேர்தல் மூலமோ அல்லது மாகாண சட்டப்பேரவைகளை மீண்டும்ஏற்படுத்துவதன் மூலம் ராணுவம் தனது ஆட்சியை பாதுகாப்பாக விலக்கிக் கொள்ளவாய்ப்புத் தர பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தயாராக உள்ளது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் பாகிஸ்தான் ராணுவம்மக்களின் கடுமையான எதிர்ப்பை மட்டுமல்ல பாகிஸ்தான் முஸ்லிம் லீகின்பலவிதமான போராட்டங்களையும் எதிர் கொள்ளவேண்டியிருக்கும்.
ராணுவ ஆட்சியால் பாகிஸ்தானுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. மாறாகநாட்டின் பொருளாதாரம் மிகவும் கீழ்நிலைக்குச் சென்றுவிட்டது. மக்களிடையேஒருமைப்பாடு குலைந்துவிட்டது. தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்அதிகமாகிவிட்டது.
அரசு ஒழுங்காக நிர்வகிக்க முஷாரப்புக்குத் தெரியவில்லை. அவரது ஆட்சிக்குஎதிர்ப்புத் தெரிவித்து அவரது அமைச்சரவையிலிருந்து 10 அமைச்சர்கள் ராஜினாமாசெய்துள்ளனர்.
பாகிஸ்தான் அமைச்சரவையில் சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதை முஷாரப்பேஒப்புக் கொண்டுள்ளார். இது அவரது தோல்வியையே காட்டுகிறது.
இருப்பினும், தேச நலனை முன்னிட்டு பாகிஸ்தான் ராணுவ ஆட்சியுடன் பேச்சு நடத்தநான் விரும்புகிறேன். பொதுவான, நல்ல முடிவு காணப்படும் என்ற உறுதி இருந்தால்அந்த பேச்சுவார்த்தையில் நான் கலந்து கொள்வேன்.
தனது அதிகாரத்தை வைத்து தனது பக்க நியாயத்தை மட்டுமே பேச்சுவார்த்தையில்முன் வைக்க ராணுவம் முயன்றால் அதில் நான் கலந்து கொள்ளமாட்டேன். எனதுகருத்துக்களுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும்.
ராணுவ ஆட்சியால் பாகிஸ்தான் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டது.அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் செயல்படும் ஒரு அரசை மீண்டும் அங்குஏற்படுத்துவதன் மூலமே இதை சரிப்படுத்தமுடியும்.
நாட்டில் மீண்டும் ஜனநாயகம் தழைத்தோங்கச் செய்யவேண்டும். ஜனநாயகம் என்பது14 கோடி பாகிஸ்தான் மக்களின் அடிப்படை உரிமையாகும். அந்த வகையில் நாட்டில்ஜனநாயகத்தை மீண்டும் ஏற்படுத்துவதுதான் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்கின்இப்போதைய அடிப்படைக் கொள்கை.
நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதான் ஒரே கொள்கை என்றாலும், பாகிஸ்தான்மக்கள் கட்சியுடன் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கூட்டு வைத்துக் கொள்ளும் என்பதுஅர்த்தமல்ல. இரு கட்சிகளின் கொள்கைகளும் வெவ்வேறானவை. இரண்டும் ஏற்றுககொண்டு செயல்படும் பிரச்சினைகளும் வெவ்வேறானவை.
ஆனால், இப்போதைய சூழ்நிலையில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக், பாகிஸ்தான் மக்கள்கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் மீண்டும் ஜனநாயகம் என்ற ஒரேகொள்கையின் கீழ் இணைந்து செயல்படவேண்டும். அதுதான் இப்போதைய தேவைஎன்றார் நவாஸ் ஷெரீப்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications