ஓசி டீ : 2 பேரை அடித்த போலீஸ்காரர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

கோவை:

குடித்த டீக்கு பணம் கேட்ட டீ வியாபாரிகள் இருவரை கொடூரமாக அடித்து உதைத்த 4 ரயில்வே போலீசார்ை கைது செய்யப்பட்டனர்.

கோவை ரயில் நலையத்திற்கு எதிரே டீ கடை வைத்திருப்பவர் சந்திரன் மற்றும் இவரது மகன் ரஞ்சித். இவர்கள் இருவரும் ரயில்வேஸ்டேஷனுக்குள் டீ வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வந்தனர்.

இதே போன்று அக்டோபர் 19ம் தேதி மாலையில் டீ வியாபாரம் செய்ய ரயில் நிலையத்திற்குள் சென்றனர். அங்கு ரோந்து பணியில்ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படைப் போலீசார் நான்கு பேர் டீ கேட்டுள்ளனர். டீ யைப் பெற்று குடித்த பின்னர், காசுகேட்டபோது போலீசார் காசு கொடுக்க மறுத்துள்ளனர்.

ஓசி டீ வயிற்றுக்குள் சென்றவுடன் பல சட்டங்களைப் பேசினர். ரயில் நிலையத்திற்குள் நுழைய டிக்கெட் உள்ளதா எனக்கேட்டுள்ளனர். இதையடுத்து டீ விற்ற தந்தை மகனுக்கும் போலீஸ்காரர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.

டீ விற்க வந்த அந்த அப்பாவிகள் இரண்டு பேரையும் போலீசார் நின்றாக "கவனித்தனர். இதனால் மண்டை உடைந்த சந்திரன்,மற்றும் காயமடைந்த ரஞ்சித் ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசாரிடம் இருவரும் புகார் செய்தனர். இது குறித்து உடனடியாக ரயில்வே பாதுகாப்பு படைப்போலீஸ் ஐ.ஜி.,திலகவதிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஐ.ஜி. உடனடியாக 4 போலீசார் மீதும் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை பிரிவைச் சேர்ந்த ஏட்டு கனகராஜ், போலீஸ்காரர்கள் மாத்யூ செபஸ்டியன், ராதாகிருஷ்ணன்,பிரான்சிஸ் ஆகிய நான்கு பேர் மீதும் ரயில்வே போலீசரே வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

இவர்கள் மேல் விசாணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+