இங்கிலாந்தில் இந்து பூசாரி படுகொலை
லண்டன்:
இங்கிலாந்தில் இந்து பூசாரி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து இங்கிலாந்தில்வசிக்கும் இந்துக்களிடேயே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஹரிஷ் புரோஹித் (42) என்ற அந்த இந்து பூசாரி, இங்கிலாந்து தலைநகர் லண்டனில்இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லீசெஸ்டரில் பெல்கிரேவ் என்ற ஊரில்வசித்து வந்தார்.
இந்துக்கள் அதிகம் வசிக்கும் லீசெஸ்டரில் உள்ள ஸ்ரீசக்தி மந்திர் கோயிலில் அவர்பூசாரியாகப் பணியாற்றி வந்தார். இதனால், இந்துக்களிடையே ஹரிஷ் புரோஹித்நன்கு பரீட்சயமானவர்.
பூசாரியாக மட்டுமல்ல மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான பள்ளியை நடத்தி வந்தார்.இந்து கலாசாரத்தைப் பரப்பும் நடவடிக்கையிலும் அவர் ஈடுபட்டு வந்தார்.
இந் நிலையில், வியாழக்கிழமை இரவு ஹரிஷ் புரோஹித் அடையாளம் தெரியாதநபரால் படுகொலை செய்யப்பட்டார்.
வீட்டுக்குள் நுழைந்த கொலையாளி, ஹரிஷ் புரோஹித்தை கத்தியால் குத்திப்படுகொலை செய்துவிட்டு, அடையாளம் தெரியாமல் இருப்பற்காக சமையல்எரிவாயுவைத் திறந்துவிட்டு வீட்டுக்குத் தீவைத்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.
இதனால், ஹரிஷ் புரோஹித் உடல் தீயில் கருகி அடையாளம் தெரியாமல்சிதைந்துவிட்டது. ஹரிஷ் புரோஹித்தின் இந்த படுகொலைச் சம்பவம் லீசெஸ்டர்நகரிலும், அங்கு வசிக்கும் இந்துக்கள் இடையேயும் பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.
கொலையாளியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஹரிஷ் புரோஹித்கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. கொலையாளியைப் பற்றிஅடையாளம் தெரிந்தவர்கள் அது பற்றி உடனே தெரிவிக்கும்படி போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications