தீபாவளிக்கு முன் ராஜ்குமார் விடுதலை? உறுதி அளிக்கவில்லை என்கிறார் நெடுமாறன்
சென்னை:
தீபாவளிக்கு முன் ராஜ்குமார் விடுதலை ஆவார் என்று நான் யாருக்கும் உறுதிஅளிக்கவில்லை என்று தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்தார்.
சந்தனக் கடத்தல் வீரப்பனால் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டுள்ளார். அவரைமீட்கும் நடவடிக்கையில் நக்கீரன் கோபால் ஈடுபட்டார். அவரைத் தொடர்ந்து அந்நடவடிக்கையில் பழ. நெடுமாறனும் ஈடுபட்டார்.
சமீபத்தில் நக்கீரன் கோபால், பழ. நெடுமாறன் உள்பட 4 பேர் அரசுத் தூதர்களாகக்காட்டுக்குள் சென்று வீரப்பனிடம் பேசினர். பேச்சுவார்த்தையின் முடிவில் வீரப்பன்பிடியிலிருந்து ராஜ்குமாரின் மருமகன் கோவிந்தராஜு விடுவிக்கப்பட்டார்.
இந் நிலையில், கர்நாடக திரைப்பட தொழில் நடவடிக்கை கமிட்டியினர் சென்னைசென்று பழ. நெடுமாறனைச் சந்தித்தனர். அப்போது, மீண்டும் காட்டுக்குள் சென்றுராஜ்குமாரை மீட்கும் நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்று நெடுமாறனைஅவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இதற்கிடையே, தீபாவளிக்கு முன் ராஜ்குமார் விடுதலை செய்யப்படுவார் என்றுகர்நாடக திரைப்படத் துறையினருக்கு நெடுமாறன் உறுதி அளித்ததாகபத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகின.
இச் செய்தியை நெடுமாறன் மறுத்துள்ளார். தீபாவளிக்கு முன் ராஜ்குமார் விடுதலைசெய்யப்படுவார் என்று நான் யாருக்கும் உறுதி அளிக்கவில்லை என்று அவர்ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
பத்திரிக்கைகளில் வெளியான செய்தி தவறு. அத்தகைய செய்திகள் மக்களிடையேதவறான நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திவிடும். வீரப்பனிடம்மீண்டும் பேச்சு நடத்த காட்டுக்குள் செல்லத் தயாராக இருக்கிறேன்.
ஆனால், ராஜ்குமார் எப்போது விடுதலை செய்யப்படுவார் என்பதை என்னால்சொல்லமுடியாது. அது பற்றி எந்த உறுதிமொழியையும் நான் கொடுக்கமாட்டேன்.என்னால் முடிந்த வரை ராஜ்குமாரை மீட்கும் முயற்சியை மேற்கொள்வேன் என்றுநெடுமாறன் தெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications