டெல்லி திரும்பினார் பிரதமர் வாஜ்பாய்
டெல்லி:
மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரதமர் வாஜ்பாய்ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் டெல்லி வந்து சேர்ந்தார்.
இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்த அவரை குடியரசுத்தலைவர் கே.ஆர். நாராயணன், குடியரசுத் துணைத் தலைவர் கிருஷ்ண காந்த்ஆகியோர் வரவேற்றனர்.
மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் காணப்பட்ட வாஜ்பாய், வரவேற்றநாராயணனுக்கும், கிருஷ்ண காந்த்துக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
பின்னர் விமான நிலையத்திலிருந்து நேரடியாக ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ளவீட்டுக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
மும்பையில் உள்ள பிரீச் கேன்டி மருத்துவமனையில் கால் மூட்டு அறுவை சிகிச்சைசெய்து கொண்டார் பிரதமர் வாஜ்பாய். அவருக்கு அமெரிக்காவில் உள்ள இந்தியமருத்துவர் சித்தரஞ்சன் ரணவத் அறுவை சிகிச்சை செய்தார்.
கடந்த 12 நாட்களாக மருத்துவமனையில் தங்கி ஓய்வு எடுத்து வந்த அவர்,ஞாயிற்றுக்கிழமை மாலை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
டெல்லி புறப்பட்டுச் செல்வதற்கு முன் மருத்துவமனையிலேயே சக்கர நாற்காலியில்உட்கார்ந்தபடி நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.
நான் முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும், வழக்கமான பணிகளைமேற்கொள்ளமுடியும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதைக் கேட்டு நான்மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
எனக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் சித்தரஞ்சன் ரணவத்துக்கு நன்றிதெரிவித்துக் கொள்கிறேன் என்றார் வாஜ்பாய்.
மும்பையிலிருந்து விமானப்படை சிறப்பு விமானம் மூலம் வாஜ்பாய் டெல்லிபுறப்பட்டுச் சென்றார். மருத்துவமனை அருகிலும், மும்பை விமானம் நிலையம்செல்லும் வழி நெடுகிலும் மக்கள் கூடி நின்று அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
மும்பை பிரீச் கேன்டி மருத்துவமனை அருகில் சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளத்துக்குவாஜ்பாய்க்கு வாழ்த்துக்களும், அவர் விரைவில் குணமடையவேண்டும் என்றும்வாழ்த்து பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
அது தவிர, தபால் மூலமும் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான வாழ்த்து அட்டைகள்வாஜ்பாய்க்கு வந்துள்ளன. அந்த வாழ்த்து அட்டைகள் அனைத்துக்கும் டெல்லிதிரும்பியவுடன் புகைப்படத்தில் கையெழுத்துடன் கூடிய கடிதத்தை அனுப்ப பிரதமர்முடிவு செய்துள்ளார்.
டெல்லி புறப்படும் முன், பிரீச் கேண்டி மருத்துவமனை மருத்துவர்களுக்கும்,ஊழியர்களுக்கும் வாஜ்பாய் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications