50 தொகுதிகள் கேட்கிறது பா.ஜ.க.
சென்னை:
ஜாதிக் கட்சிகளுக்கு பாரதீய ஜனதாகட்சி முக்கியத்துவம் கொடுக்காது. வரும்சட்டசபைத்தேர்தலில் ஐம்பது இடங்களில் பா.ஜ.க போட்டியிடும். என்று தமிழக பா.ஜ.கதலைவர் டாக்டர் கிருபாநிதி நிருபர்களிடம் கூறினார்.
நாகர்கோவிலில் நிருபர்களிடம் பேசிய டாக்டர் கிருபாநிதி, பா.ஜ.கவின் வளர்ச்சி மகிழ்ச்சிதரும் வகையில் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் எல்லா தொகுதிகளிலும்போட்டியிட பா.ஜ.க தயாராக இருக்கிறது.
தமிழகத்தில் தற்பொழுதைய அரசியல் சூழ்நிலையை பார்க்கும் பொழுது தேர்தலில் அதிகஎம்.எல்.ஏக்களை பா.ஜ.க பெறும்.
தமிழகத்தில் பா.ஜ.க உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று மாதங்களில் மூன்றரைமடங்கு உயர்ந்துள்ளது. மூன்று லட்சம் உறுப்பினர்கள் எண்ணிக்கை 11 லட்சமாகஉயர்ந்துள்ளது. பிற கட்சியை சேர்ந்தவர்களும் பா.ஜ.கவில் இணைவதில் ஆர்வமாகஉள்ளனர்.
ராஜ்குமாரை மீட்கும் விஷயத்தில் தி.மு.க அரசின் செயல்பாடு சரியான பாதையில்தான்செல்கிறது. அவரை உயிருடன் மீட்க வேண்டும். தீவிரவாதத்தை பா.ஜ.க ஒரு போதும்ஆதரிக்காது. முதல் கட்டம் ராஜ்குமார் மீட்பு. அடுத்த கட்டம் தான் வேறு நடவடிக்கைகள்.
ராமதாஸ் - வாழப்பாடி மோதலால் கூட்டணியில் எவ்வித பிரச்சனையும் இல்லை. மம்தாபானர்ஜி அரசியல்வாதி. அதனால் அவருக்கு பிரச்சனைகளின் உண்மை தெரியும்ஆனாலும், தனது மாநில மக்களை திருப்திபடுத்துவதற்காக கோரிக்கைகளை கேட்பார்.இதனால் கூட்டணியில் பிரச்சனை இல்லை.
ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டது சட்டம் தன் கடமையைச் செய்துள்ளதைக்காட்டுகிறது. அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கேபினட் அந்தஸ்து கேட்டுவற்புறுத்தப்படும்.
வரும் தேர்தலில் பா.ஜ.க ஐம்பது இடங்களைக் கோரும். கூட்டணியில் பேசி முடிவு செய்துபோட்டியிடுவோம் என்றார் கிருபாநிதி.
பேட்டியின்போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் உடனிருந்தார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications