60 வயதைத் தொட்டார்
ரியோ டி ஜெனீரோ:
பிரேசில் நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சராகவும், ஐக்கிய நாடுகள் சபையின்நல்லெண்ணத் தூதராகவும் செயல்பட்டு வரும் முன்னாள் கால்பந்து உலக சாம்பியன்பீலே, திங்கள்கிழமை தனது 60-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
பிரேசில் நாட்டுக்காக பல சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் கலந்து கொண்டவர்பீலே. 21 ஆண்டு கால கால்பந்து விளையாட்டு வாழ்க்கையில் அவர் மொத்தம் 1283கோல்கள் போட்டுள்ளார்.
இதுவரை இந்த சாதனையை யாரும் முறியடிக்கவில்லை. கால்பந்து ரசிகர்களிடையேபீலே ஒரு சரித்திர நாயகனாகவும், கடவுளாகவும் கருதப்படுகிறார்.
பீலே, பிரேசில் அணிக்காக 1958, 62, 70 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பைகளைவென்று தந்துள்ளார். இது தவிர வேறு பல பட்டங்களையும், கோப்பைகளையும் அவர்வென்று தந்துள்ளார்.
கால்பந்துப் போட்டியில் அவரைப் போல் சாதனைகளைப் படைத்தவர் யாரும்இல்லை. தற்போது அவர் பிரேசில் நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சராகப்பணியாற்றி வருகிறார்.
கடந்த ஆண்டு அவருக்கு யாருக்குமே கிடைக்காத பெருமை கிடைத்தது. கடந்தநூற்றாண்டின் சிறந்த கால்பந்து வீரராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதுதான் அது.
அத்தகைய சிறப்பும், பெருமையும் மிக்க பீலே, தனது 60-வது பிறந்த நாளைதிங்கள்கிழமை கொண்டாடுகிறார். அவருக்கு உலகம் முழுவதும் இருந்து ஏராளமானரசிகர்களும், உலகத் தலைவர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் தனது இரண்டாவது மனைவியுடன் இரட்டைக் குழந்தைகளுடன்தனது பிறந்த நாளை பீலே கொண்டாடுகிறார். ரசிகர்கள் மற்றும்குடும்பத்தினருக்காகவே நான் பிறந்தநாளைக் கொண்டாடுகிறேன். மற்றபடி எனக்குஇத்தகைய நிகழ்ச்சிகள் பிடிக்காது என்று பீலே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications