அஸ்ஸாமில் உல்பா தீவிரவாதிகள் அட்டூழியம்: 16 பேர் சுட்டுக் கொலை
குவஹாத்தி:
அஸ்ஸாம் மாநிலத்தில் உல்பா தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர்இறந்தனர். 10 பேருக்கு மேல் காயமடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை இச்சம்பவங்கள் நடந்தன.
மேற்கு அஸ்ஸாமில் துலியாஜின் என்ற இடத்தில் 4 பேரையும் துலியாஜினிலிருந்து 30கிலோமீட்டர் தொலைவில் மேலும் 11 பேரையும் அவர்கள் சுட்டுக் கொன்றனர்.
சுமார் ஒன்றரை மணி நேரத்தில் இரு சம்பவங்களும் நடந்து முடிந்துவிட்டன. இச்சம்பவங்களில் 10 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
துலியாஜின் என்ற இடத்தில் நாவோஹோலோயா என்ற மார்க்கெட்டுக்குள்துப்பாக்கியுடன் புகுந்த 4 தீவிரவாதிகள், அங்கிருந்த மக்கள் மீது கண்மூடித்தனமாகச்சுட்டனர். இதில் 3 வயது சிறுவன் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
அதே போல் காகோஜான் என்ற இடத்தில் உள்ள மார்க்கெட்டுக்குள் நுழைந்த 10 பேர்கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டு 11 பேரைக் கொலை செய்தனர். இருசம்பவங்களிலும் ஈடுபட்ட தீவிரவாதிகள் பிடிபடாமல் தப்பியோடிவிட்டனர்.
திப்ருகர் மாவட்டத்தில் பணம் கொடுக்க மறுத்த தொழிலதிபரையும் உல்பாதீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
சம்பவ இடங்களுக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணைமேற்கொண்டனர். தீவிரவாதிகளைப் பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.சம்பவ இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ் விருசம்பவங்களுக்கான காரணம் தெரியவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாகபோலீஸார் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications