ராமதாசுக்கு வக்காலத்து வாங்கும் மேதாவிகள் .. பாய்கிறது த.ரா.கா.
சென்னை:
ஜாார்கண்ட் முக்தி மோர்ச்சா வழக்கு மாதிரி, புதிதாக தமிழகத்தில் லஞ்ச வழக்கு தலைதூக்கியுள்ளது.
வாழப்பாடி ராமூர்த்திக்கும், ராமதாசுக்கும் இடையிலான மோதல் இப்பொழுது புதியகோணத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது எங்கள் கட்சிலிருந்து எவ்வளவு பெற்றார்என்பதை தகுந்த ஆதாரங்களோடு நிரூபிக்கத் தயாராக இருக்கிறோம் என்பதைடாக்டர் ராமதாசுக்கு வக்காலத்து வாங்கி அறிக்கை விடும் மேதாவிகளுக்குதெரிவித்துக் கொள்கிறேன் என்று தமிழக ராஜீவ் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக ராஜீவ் காங்கிரஸ் துணைத் தலைவரும், செய்தித்தொடர்பாளருமான பேராசிரியர் தி.சு.கிள்ளிவளவன் அறிக்கை விடுத்துள்ளார்.
அதில், எங்கள் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர்ராமதாஸ் பற்றி இதுவரை சொல்லிவந்த பல புகார்களுக்கு கண்டனம் தெரிவித்துஅந்தக் கட்சியின் தலைவரும் சட்டப் பேரவை உறுப்பினருமான ஜி.கே. மணி. இணைப்பொதுச் செயலாளர் பு.தா. இளங்கோவன் எம்.பி. ஆகியோர் கூட்டாக ஒரு அறிக்கைவெளியிட்டுள்ளனர்.
வாழப்பாடி ராமமூர்த்தி எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதில் சொல்லமுடியாமல் சுற்றி வளைத்து பிரச்னையை திசை திருப்பும் வகையில் ஒரு அறிக்கைவெளியிட்டுள்ளார்கள்.
வாழப்பாடி ராமமூர்த்தியின் குற்றச்சாட்டு 2.5 கோடி ரூபாய் வாங்கினார் என்பது.அதற்கு உண்டு இல்லை என்று பதில் சொல்லாமல் கண்டனம் என்ற பெயரில் அறிக்கைவெளியிட்டுள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, இந்த அறிக்கைவிடும் மேதாவிகள்எங்களிடம் இருந்து பெற்றது எவ்வளவு என்பதை அதற்கு உண்டான ஆதாரங்களுடன்நிரூபிக்க நாங்கள் தயாராகவே உள்ளோம்.
டாக்டர் ராமதாசுக்கு கொஞ்சமேனும் மனசாட்சி இருக்குமானால் இது போன்றஅறிக்கைகள் விடுவதற்கு அனுமதிக்க மாட்டார். அறிக்கை விட்டவர் மனசாட்சிஇல்லாததன் காரணமாக இப்படி ஒரு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
பணம் பெறவில்லை என்று அவர் ஒரு பொழுதும் சொல்லவில்லை. சொல்லவும்முடியாது. அறிக்கை விடுபவர்கள் இதன் ரகசியத்தை உணர வேண்டும்.
கட்சிகள் சார்பில் கொடுத்ததை ராமதாஸ் மறுப்பாரேயானால் எல்லாவிதவிசாரணைக்கும் அவரும் அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் தயார்தானே?என்று கேட்க விரும்புகிறேன் என்று கிள்ளிவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications