2000-01ம் ஆண்டின் முதல் பாதியில் 3 லட்சம் கார்கள் விற்பனை
டெல்லி:
2000-01ம் நிதி ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவில் 3 லட்சத்துக்கும் அதிகமானகார்கள் விற்பனையாகியுள்ளன.
இந்திய மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவூ மாட்டிஸ், ஹுண்டாய் சான்ட்ரோ, டாடா இன்டிகா கார்களின் விற்பனைஅதிகரித்துள்ளது. ஆனால், இந்தியாவின் மிகப் பெரிய மாருதி உத்யோக் நிறுவனத்தின்மாருதி கார்களின் விற்பனை குறைந்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் 6 மாதத்தில் மொத்தம் 3 லட்சத்து 4 ஆயிரத்து 894 கார்கள்விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டை விட 1.4 சதவீதம் அதிகமாகும். கடந்த 3லட்சத்து 414 கார்கள் மட்டுமே விற்பனை ஆகின.
இந்தியாவில் விற்பனை ஆன கார்களில் மாருதி கார்களின் எண்ணிக்கைதான் அதிகம்.இருந்தாலும், கடந்த ஆண்டு விற்பனையை விட இந்த ஆண்டு 16 சதவீதம் விற்பனைகுறைந்துள்ளது.
கடந்த மொத்த கார் விற்பனையில் 66 சதவீதமாக இருந்த மாருதி கார்களின் விற்பனைஇந்த ஆண்டில் 50 சதவீதமாகக் குறைந்துவிட்டது. இந்த ஆண்டில் மொத்தம் 1 லட்சத்து68 ஆயிரத்து 274 மாருதி கார்கள் தான் விற்பனையாகியுள்ளன.
புதிய மாடல்கள் கார்கள் அறிமுகம், விலை குறைப்பு போன்றவை அறிவிக்கப்பட்டபோதிலும் மாருதி கார்களின் விற்பனை அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாருதி கார்களைப் போலவே ஃபியட், மெர்சிடெஸ் போன்ற கார்களின் விற்பனையும்வெகுவாகக் குறைந்துள்ளது.
கார்கள் விற்பனையில் ஹுண்டாய் கார்கள் இரண்டாம் இடத்தையும், டேவூ கார்கள்மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.
முதல் ஆறு மாதத்தில் 43,845 ஹுண்டாய் கார்கள் விற்பனை ஆகியுள்ளன. இது கடந்தஆண்டை விட 37.6 சதவீதம் அதிகம். அதேபோல் கடந்த ஆண்டை விட இரு மடங்குஅதிகமாக தேவூ கார்கள் விற்பனை ஆகியுள்ளன. டாடா கார்களின் விற்பனையும்கடந்த ஆண்டை விட 15.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
புதிய சிறிய மாடல் கார்களுக்கு மக்களிடையே அதிக வரவேற்பு இருந்தபோதிலும்,ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மாடலான அம்பாசிடர் மற்றும் லான்சர்கார்களின் விற்பனையும் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்துள்ளது.
போர்டு இந்தியா, ஜெனரல் மோட்டார்ஸ், ஹோண்டா ஆகியவற்றின் கார்களின்விற்பனையும் அதிகரித்துள்ளது.
ஆனால், பிரீமியர் ஆட்டோமொபைல் நிறுவனம் மற்றும் பால்-பீஜியோநிறுவனங்களின் ஒரு கார் கூட விற்பனை ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications