சிவகாசியில் போலி பெண் டாக்டர் கைது

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்:

சிவகாசியில் போலி பெண் டாக்டர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

சாத்தூர் அண்ணாநகரைச் சேர்ந்தவர் சங்கரபாண்டி. இவரது மனைவி கனகா (45).இவர் சிவகாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டரின் உதவியாளராக 25ஆண்டுகளாக பணி புரிந்து வந்தார்.

அந்த அனுபவத்தை வைத்துக் கொண்டு சிவகாசியில் தனியாக ஒரு கிளினிக்ஆரம்பிக்க திட்டமிட்டார். அதற்காக அக்குபஞ்சர் படிப்பு படித்ததற்கான சான்றிதழ்தயார் செய்து கைவசம் வைத்துக் கொண்டு நாராயணபுரம் சாலையில் கிளினிக்ஆரம்பித்தார்.

கிளினிக் மூலம் நல்ல வருமானம் கிடைத்தது. அடுத்ததாக தாயில்பட்டியில்இரண்டாவது கிளினிக்கை துவங்கினார். காலையில் இருந்து மதியம் வரைதாயில்பட்டியிலும், மாலை முதல் இரவு வரை நாராயணபுரம் கிளனிக்கிலும் சிகிச்சைஅளித்தார்.

படிக்காத கிராமத்து மக்கள் மத்தியில் இவரது வைத்தியம் எடுபட்டது. பணம்கொட்டியது. ஆனால், இவர் சின்ன சின்ன வைத்தியத்தோடு நிறுத்திக்கொள்ளவில்லை.

பிரசவம், அறுவை சிகிச்சை என்று அளவில்லாமல் போனதால் பிரச்னை எழுந்தது.இவரைப் பற்றியும், இவரது வைத்தியம் பற்றியும் மாவட்ட கலெக்டருக்கு புகார்கள்குவிந்தன.

இதையடுத்து கனகாவின் டாக்டர் தொழில் பற்றி ரகசியமாக விசாரிக்கும்படிபோலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி பெண் தாசில்தார் வள்ளி ரகசியவிசாரணையில் இறங்கினார். சாதாரண நோயாளி போல் கனகாவின் கிளினிக்கிற்குசென்றார்.

கனகாவை சந்தித்துப் பேசிய போது அவரது மருத்துவ அறிவு புஸ்வானமாகிப்போனது. பின்னர் போலீசார் உதவியுடன் கனகாவின் இரண்டு கிளினிக்குகளையும்சோதனையிட்டனர்.

ஆங்கில வகை மருந்துகள், ஊசிகள் என்று ஏராளமானவற்றை அவர் பயன்படுத்தியதுதெரிந்தது. இதையடுத்து கனகாவை போலீசார் கைது செய்து சிவகாசியில்நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+