கோவா முதல்வர் பதவி விலகினார்: பா.ஜ.க. ஆட்சியமைக்கிறது
பனாஜி:
கோவா முதல்வர் பிரான்சிஸ்கோ சர்டின்ஹோ, செவ்வாய்க்கிழமை தனது முதல்வர்பதவியை ராஜினாமா செய்தார்.
சில தினங்களுக்கு முன்பு கோவா காங்கிரஸ் அமைச்சரவையிலிருந்து 4 அமைச்சர்கள்விலகினர். தனிப் பிரிவாக சட்டசபையில் செயல்படப் போவதாக கூறினர்.இதையடுத்து முதல்வர் சர்டின்ஹோ தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடிஏற்பட்டது.
நான்கு அமைச்சர்கள் பதவி விலகியதையடுத்து செவ்வாய்க்கிழமை சட்டசபையில்நம்பிக்கை வாக்கு கோர முதல்வர் சர்டின்ஹோ முடிவு செய்திருந்தார். இந்தச்சூழ்நிலையில் நம்பிக்கை வாக்கு கோருவதற்கு முன்பே தனது முதல்வர் பதவியைராஜினாமா செய்தார்.
ராஜினாமா செய்வது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், எனது அரசுபெரும்பான்மை பலத்தை இழந்து விட்டது. எனவே முதல்வர் பதவியை ராஜினாமாசெய்கிறேன் என்றார்.
பின்னர் சர்டின்ஹோ தனது அமைச்சர்களுடன் ராஜ்பவனுக்குச் சென்று ஆளுநர்முகம்மது பசலிடம் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார்.
காங்கிரஸ் அரசு பதவி விலகி விட்டதால், அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன்பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சியமைக்க உள்ளது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications