அரசியல் சீர்திருத்தம்: சந்திரிகாவுக்கு எதிர்க்கட்சி 69 நாள் கெடு
கொழும்பு:
இலங்கையில் அரசியல் சீர்திருத்தம் மேற்கொள்ள அதிபர் சந்திரிகா குமாரதுங்காவுக்குமுக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி 69 நாள் கெடு விதித்துள்ளது.
அதற்குள் அரசியல் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை என்றால் அரசுக்கு அளித்துவரும் ஆதரவு வாபஸ் பெற்றுக் கொள்ளப்படும் என்று அக் கட்சி தெரிவித்துள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்துக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் அதிபர் சந்திரிகாகுமாரதுங்காவின் மக்கள் கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால், ஆட்சி அமைக்கத்தேவையான அருதிப்பெரும்பான்மை வெற்றி கிடைக்கவில்லை.
இதையடுத்து இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சிஆகிய இரு கட்சிகளின் நிபந்தனையுடன் கூடிய ஆதரவுடன் மக்கள் கூட்டணி ஆட்சிஅமைத்தது.
இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும். நீதித் துறை, தேர்தல்உள்ளிட்டவை தொடர்பாக தனி கமிஷன்கள் நியமிக்கவேண்டும் உள்ளிட்டநிபந்தனைகளை அவை விதித்தன.
நிபந்தனைகளை 100 நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால்ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்வோம் என்று அக் கட்சிகள் கெடு விதித்துள்ளன.
இந் நிலையில், முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும், அதிபர்சந்திரிகாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதை நிறுத்த முடிவுசெய்துள்ளது.
இனப் பிரச்சினையால் சீர்குலைந்துள்ள நாட்டை மீண்டும் சீர் தூக்கும் நடவடிக்கையாகஅதிபர் சந்திரிகா குமாரதுங்காவுக்கு ஆதரவு அளிக்க அக் கட்சி முன் வந்துள்ளது.ஆனால், அக் கட்சியும் நிபந்தனை விதித்துள்ளது. முக்கியமான அரசியல்சீர்த்திருத்தங்களை இந்த ஆண்டு முடிவுக்குள் சந்திரிகா குமாரதுங்காமேர்கொள்ளவேண்டும்.
அதற்கு 69 நாள் கெடு தரப்படுகிறது. 69 நாட்களுக்குள் எந்த அரசியல்சீர்திருத்தத்தையும் சந்திரிகா குமாரதுங்கா மேற்கொள்ளவில்லை என்றால் ஆதரவுவாபஸ் பெற்றுக் கொள்ளப்படும். அதற்குப் பிறகு அரசுக்கு எதிரான நடவடிக்கைகள்தொடரும் என்று அக் கட்சி கூறியுள்ளது.
நாட்டில் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தி மீண்டும் ஒரு தேர்தலை மக்கள் தலையில்திணிக்க ஐக்கிய தேசிய கட்சி விரும்பவில்லை. அதனால்தான் சந்திரிகாவுக்கு ஆதரவுஅளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய எதிர்க்கட்சியாக இருந்து ஆதரவு தெரிவித்துள்ள நிபந்தனையின் பேரில்தான்.நாட்டின் நலன் கருதியே இந்த முடிவை கட்சி எடுத்துள்ளது.
அதைப் புரிந்துகொண்டு ஆதரவுக் கட்சிகளின் நிபந்தனைகளை நிறைவேற்ற அதிபர்சந்திரிகா குமாதுங்கா நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சித்தலைவர்கள் தெரிவித்தனர்.
தற்போது இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கு 89இடங்கள் உள்ளன. ஆட்சி அமைத்துள்ள அதிபர் சந்திரிகாவின் மக்கள் கூட்டணிக்கு116 இடங்கள் உள்ளன.
மீதமுள்ள இடங்களை மற்ற கட்சிகளும், சுயேட்சைகளும் பெற்றுள்ளன.நிபந்தனையின் பேரில் சந்திரிகாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகள் எதிர்காலத்தில்தங்களது ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டு ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவுதெரிவிக்கும் பட்சத்தில் அக்கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உருவாகும் என்றுகருதப்படுகிறது.
அந்த வகையில் ஆதரவுக் கட்சிகளின் ஆதரவை எந்த வகையிலும் இழக்க சந்திரிகாகுமாரதுங்கா விரும்பமாட்டார். அக் கட்சிகளின் அனைத்து நிபந்தனைகளையும்நிறைவேற்ற முடியவில்லை என்றாலும் ஒருசில நிபந்தனைகளை அவர்நிறைவேற்றுவார் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications