முதல்வர் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார் ஜோதிபாசு
கல்கத்தா:
23 ஆண்டுகளாக மேற்கு வங்க மாநில முதல்வராக இருந்து வந்தமார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் முதல்வர் ஜோதி பாசு நவம்பர் முதல் வாரத்தில் முதல்வர்பதவியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு முதல்வர் பதவியிலிருந்து, ஓய்வு பெறுவதாகஅவர் கூறியுள்ளார். கல்கத்தாவில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர்பேசுகையில், துணை முதல்வர் புத்ததேவ் பாட்டசார்ஜி அடுத்த முதல்வராகபதவியேற்பார்.
கல்கத்தாவில் சனிக்கிழமை நடைபெறவுள்ள இடதுசாரிக் கூட்டணியின் கூட்டத்தில்எனது ஓய்வு குறித்து விவாதிக்கப்படும். அதன் பிறகு அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்படும்.
புதிய முதல்வர் மேற்கு வங்கத்திற்குக் கிடைப்பார். நவம்பர் முதல் வாரத்தில் அவர்பதவியேற்பார். எனக்கும், மாநிலஅரசுக்கும் நலன் பயக்கக் கூடியது இந்த முடிவு.
முதல்வராக நான் இல்லாமல் போனாலும் கூட கட்சியிலிருந்து நான் விலக மாட்டேன்.எனது இறுதி மூச்சு வரை கம்யூனிஸ்டாகவே இருப்பேன் என்றார் பாசு.
ஜோதிபாசு 1977-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி மேற்கு வங்க மாநில முதல்வராகப்பொறுப்பேற்றார். 1946-ம் ஆண்டிலிருந்து அவர் தேர்தலில் போட்டியிட்டு வருகிறார்.1972-ம் ஆண்டு தவிர பிற தேர்தல்கள் அனைத்திலும் அவர் வெற்றி பெற்று சாதனைபடைத்துள்ளார். தொடர்ந்து 23 ஆண்டுகள் மேற்கு வங்க மாநில முதல்வராக அவர்இருந்ததும் கூட ஒரு சாதனை ஆகும்.
கவர்னரின் ஆலோசனைப்படி புதிய முதல்வர் பதவியேற்பதற்கான தேதியை இறுதிசெய்யும்படி மாநில தலைமைச் செயலாளரை, ஜோதிபாசு கேட்டுக் கொண்டுள்ளார்.
யு.என்.ஐ.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications