தீபாவளிக்கு சேலை இல்லை.. பெண் தற்கொலை
மதுரை:
தீபாவளிக்குக் கணவர் துணி வாங்கித் தராததால், கோபமடைந்த பெண், தனது நான்குகுழந்தைகளுக்குத் தீவைத்து விட்டு தானும் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார். இதில் இரண்டு குழந்தைகள் கருகி இறந்தன.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது வலையங்குளம். இந்த ஊரைச்சேர்ந்தவர் லட்சுமி (32). இவரது கணவர் மாயகிருஷ்ணன், போலீஸ் கான்ஸ்டபிள்.தீபாவளிக்கு லட்சுமிக்கு, மாயகிருஷ்ணன் துணி வாங்கித் தரவில்லை என்று தெரிகிறது.இதனால் லட்சுமி வருத்தமடைந்தார்.
வியாழக்கிழமை இரவு திருமங்கலத்திலிருந்து, தனது கணவரின் ஊரானவலையங்குளத்திற்குச் சென்றார். தன்னுடன் தனது குழந்தைகள் நால்வரையும் கூட்டிச்சென்றார். அங்கு மாயகிருஷ்ணன் வீட்டுக்கு வந்த பின் குழந்தைகள் நான்கு பேர் மீதும்கெரசின் ஊற்றித் தீவைத்தார். பின்னர் தானும் தீவைத்துக் கொண்டார்.
இந்த கொடூர சம்பவத்தில் லட்சுமியும், அவரது ஒன்றரை வயது மகள் மீனாவும் சம்பவஇடத்திலேயே இறந்தனர். 2 வயது மகன் பழனி முருகன் திருமங்கலம் அரசுமருத்துவனையில் இறந்தான். மகள் துர்கா தேவி (6), மகன் சரவண பெருமாள் (4)ஆகியோர் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளிக்குடி போலீஸார் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.சம்பவம் நடந்தபோது, கான்ஸ்டபிள் மாயகிருஷ்ணன் திருமங்கலத்தில்தான் இருந்தார்என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications