லாரி, வேன் மோதலில் 5 பேர் சாவு
கோவை:
திருப்பூர் அருகே திருப்பதி சென்று திரும்பி வந்த வேன் மீது லாரி மோதியதில் புது மணத் தம்பதிகள் உட்பட 5 பேர்இறந்தனர். 15 பேர் காயமடைந்தனர்.
திருப்பூர் அருகே உள்ள கே. செட்டிபாளையத்தில் சூர்யா பேப்ரிக்ஸ் என்ற பனியன் தொழிற்சாலை செயல்பட்டுவருகிறது. இந்த தொழிற்சாலையில் தீபாவளி விடுமுறை விடப்பட்டது. இதனையடுத்து இதில் பணியாற்றி வந்ததொழிலாளர்கள் திருப்பதி செல்ல முடிவு செய்தனர்.
இதையடுத்து திருப்பூரிலிருந்து வேன் ஒன்றில் புறப்பட்டனர். திருப்பதி சென்று சாமி தரிசனம் முடிந்ததும், வேனில்திரும்பினர். அதிகாலையில் திருப்பூர் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வேகமாக வந்த லாரிவேன் மீது மோதியது. இந்த விபத்தில் 5 பேர் இறந்தனர்.
இந்த விபத்தில், பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த போர்மேன் ராஜன் (28), ஜெயலட்சுமி (32), கீதா(26) ஆகியோர் இறந்தனர். புதுமணத் தம்பதிகளான ரவிக்குமார், சகிஜாவும் இறந்தனர்.
வேனில் பயணம் செய்த குழந்தைகள், பெண்கள் உட்பட 15 பேர் காயமடைந்தனர்.
அதிகாலையில் நடந்த இந்த விபத்தால், அந்தப் பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நாமக்கல்லைச் சேர்ந்த லாரி டிரைவர் மணிவண்ணன், சரவணன் ஆகியஇரண்டு பேரையும் கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications