ஏர்-இந்தியா விமான தகர்ப்பு வழக்கில் 2 சீக்கியர்கள் கைது - அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள்

Subscribe to Oneindia Tamil

டொரான்டோ:

1985-ம் ஆண்டு ஏர் இந்தியா விமானம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்ட வழக்கில் இருசீக்கியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் அரசியல் ரீதியில் செல்வாக்குமிக்கவர்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான கனிஷ்கா என்ற விமானம் கனடாவிலிருந்துடெல்லிக்கு வந்து கொண்டிருந்தது. அயர்லாந்து கடற்கரைக்கு அப்பால் நடுவானில்இந்த விமானம் வெடித்துச் சிதறியது.

இவ் விபத்தில் 331 பேர் இறந்தனர். இது தொடர்பாக கடந்த 15 ஆண்டுகளாகவிசாரணை நடைபெற்று வருகிறது. இந் நிலையில், இவ் வழக்கில் முக்கியகுற்றவாளிகளாகக் கருதப்படும் ரிபுதாமன் சிங் மாலி (53), அஜெய்ப் சிங் பாக்ரி (51)இரு சீக்கியர்கள் கைது செய்யப்பட்டனர்.

கனடாவில் வெள்ளிக்கிழமை கைதான இவரும் அரசியல் ரீதியில் அதிக செல்வாக்குமிக்கவர்கள் என்று தெரியவந்துள்ளது. இருவரும் பல முறை கனடா நாட்டு உயர்அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேசியுள்ளனர்.

சீக்கிய மதத்திலும் இருவருக்கும் நல்ல செல்வாக்கு உள்ளது. மிகப்பெரியசெல்வந்தரான மாலிக், கனடாவில் செயல்பட்டு வரும் சீக்கிய தீவிரவாத குழுக்களுக்குநிதி உதவி அளித்து வருபவர் என்று கனடா அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருவரும் பல சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும், சட்டத்தின்பிடியில் சிக்காமல் தவிர்க்கும் பொருட்டு அரசியல்வாதிகளுடன் இருவரும் தொடர்புவைத்துக் கொண்டிருந்தனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+