மருத்துவர்களுக்கு ஆர்க்காடு வீராசாமியின் ஹெல்த் டிப்ஸ்
கோவை:
டாக்டர்கள் புகைபிடிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, வாக்கிங் போக வேண்டும்என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவித்தார்.
கோவையில் மெடிடெக்ஸ் 2000 மருத்துவக் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடந்தது.இதில் அமைச்சர் பேசியதாவது:
நோயாளிகளுக்கு முன்னுதாரணமாக டாக்டர்கள் திகழ வேண்டும். டாக்டர்களே மதுஅருந்தும்போது நோயாளிகள் மது அருந்தாமல் இருப்பார்கள் என்பது நிச்சயமில்லை.
இதே போன்று புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு எனத் தெரிந்திருந்தும்டாக்டர்கள் புகை பிடிக்கின்றனர்.
சில டாக்டர்கள் தொடர்ச்சியாக புகைபிடிப்பவராக (செயின் ஸ்மோக்கர்) உள்ளனர்.இந்தப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
மேலும், மிகவும் பிஸியாக தொழிலைக் கவனித்து வரும் டாக்டர்களுக்கு "ரிலாக்ஸ்தேவைப்படுகிறது. வாக்கிங் போவதன் மூலம் மட்டுமே ரிலாக்ஸ் கிடைக்கும்.
எனவே, நோயளிகளுக்கு அறிவுரை கூறுவதோடு நின்று விடாமல், அந்தஅறிவுரையின்படி டாக்டர்களும் நடக்க வேண்டும். டப்பது உடல் நலத்துக்கு நல்லதுஎன அவர்களுக்கே தெரியும் என்றார் ஆர்க்காடு வீராசாமி.
இந்த விழாவில் டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத் துணைவேந்தர்ஆனந்தகண்ணன் பேசினார்.
மருத்துவத்தில் நவீன முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அடுத்து வரும் ஆண்டுகளில்சர்வதேச வர்த்தக ஒப்பந்தம் ஏற்படவுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் மருத்துவத் துறையில் பல்வேறு நவீன யுக்திகள் ஏற்படவாய்ப்பு உள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications