97 வாரங்களுக்குப் பிறகு பணவீக்கம் 7 சதவீதம் அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

கேள்வி - பதில்

கே: எதிர்க் கட்சித் தலைவர் என்ற முறையில், சோனியா காந்தியின் செயல்பாடுஎப்படி உள்ளது?

ப: செயல்பாடு உள்ளது என்பதே நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரிகிறது.

கே: நெடுமாறனை அரசு தூதராக நான் அனுப்பவில்லை. அரசுத் தூதுவர் கோபாலுடன் அவர் சென்றுள்ளதால், அவர் அரசு தூதராகி விட்டார் என்றுகருணாநிதி கூறியுள்ளதன் அர்த்தம் என்ன?

ப: அரசு தூதர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதால், வீரப்பனும், தீவிரவாத கோஷ்டியும், அரசு ஆகி விட்டனர்- என்று சொல்லாத வரையில்ஷேமம்.

கே: சமாதானத்திற்கான நோபல் பரிசு, தென் கொரிய அதிபர் கிம் டே ஜங்கிற்கு கிடைத்துள்ளது பற்றி ... ?

ப: தன்னைத் தீர்த்துக் கட்டி விட நடந்த முயற்சிகளைக் கடந்து, எமன் வாயிலிருந்தே ஓரிரு முறை மீண்டு வந்து, கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து,அதிபர் பதவிக்கான தேர்தல்களிலும் தோற்று, பிறகு வென்று, வட, தென் கொரியர்களிடையே சமாதானம் ஏற்பட, பெரும் முயற்சிகளை செய்து வருகிறஇவருக்கு நோபல் பரிசு கிடைத்தது நியாயம் தான்.

கே: அமெரிக்கா பல்வேறு நாடுகளில் உள்ள தனது தூதரகங்களை தற்காலிகமாக மூடி விட்டதைப் பற்றி ... ?

ப: இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருக்கிற கோபம், நமக்குப் பயன் அளிக்கக் கூடியது என்பதால், இந்தக் கோபம்வரவேற்கத்தக்கதே.

கே: தீவிரவாத அமைப்புகளோடு தொடர்பு கொண்டுள்ள கருணாநிதி, தனித் தமிழ்நாடு பெற்று, அதற்கு அதிபராக நினைக்கிறார் என்று ஜெயலலிதாகூறுவது பற்றி ...?

ப: தனித் தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், வந்தால் சந்தோஷமே என்ற அளவில்தான் இப்போது முதல்வரின் சிந்தனை.

தனித் தமிழ்நாட்டிற்காக உழைத்து, தனித் தமிழ் குடும்பத்தின் இன்றைய செல்வாக்கைக் கெடுத்துக் கொள்ள அவர் தயாராக இல்லை.

கே: பொது மன்னிப்பு என்பதற்கு வரைமுறை என்ன?

ப: குற்றம் விசாரிக்கப்பட்டு, தண்டனை அளிக்கப்பட வேண்டும். அதன் பிறகுதான் பொது மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமுண்டு.

கே: நரசிம்ம ராவ் விஷயத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறோம் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது பற்றி ... ?

ப: நரசிம்ம ராவின் துன்பம், எங்களுடைய இன்பம் என்று பொருள் காண்க.

கே: நெடுமாறன், கோபாலுடன் சேர்ந்துள்ளதால், அரசு தூதர்தான் என்று கருணாநிதியே கூறுகிறாரே! ஒரு வேளை மீண்டும் அவர் புலிகளின் பக்கம்சாய்ந்து விடுவாரோ என்ற பயத்தை இது ஏற்படுத்துகிறதே? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ப: புலிகளின் பக்கம் சாய்கிறாரோ இல்லையோ,அதற்கான கதவைத் திறந்து வைத்திருக்கிறார்.

புலி ஆதரவாளர்களைத் தூதுவர்களாக அனுப்பி - காட்டில் உள்ள புலி ஆதரவாளர்கள், புலி சீடர்கள் ஆகியோரோடு அவர்கள் பேச்சு நடத்த முதல்வர்உதவியிருக்கிறார்.

பெற்ற பணத்தைக் கொண்டு ஆயுதங்கள் பெறுவதற்கான வழிமுறைகள் என்ன? புலி பிரச்சாரத்தை முடுக்கி விடுவது எப்படி? நாச வேலை செய்வதற்குநேரம், இடம் என்ன?

தப்பிப்பதாக இருந்தால் அதற்கான ஏற்பாடுகள் என்ன? மற்ற ஆதரவாளர்களோடு தொடர்பு ஏற்படுத்துவது எப்படி? புலி சார்பில் தகவல் தொடர்புசாதனங்களை நிறுவ வழி உண்டா ?... என்பன போன்ற பல திட்டங்களை இவர்கள் எல்லாம் பேசி முடிவு செய்து கொள்ள அரசே வழி செய்துகொடுத்திருக்கிறது.

புலிக்கொடியை நாட்ட முதல்வர் உதவியிருக்கிறார். ஆக, உறவு தேவைப்பட்டால், ஏற்படுத்திக் கொள்ள இனி தடையில்லை.

கே: ஜெயலலிதா - வீரமணி உறவு ; முதல்வர் கருணாநிதி - நெடுமாறனின் சமீபகால உறவு - ஆகியவற்றுக்கிடையே உள்ள ஒற்றுமை,வேற்றுமை எனன?
ப: பட்டாசு தயாரிப்புக்கும், வெடி குண்டு தயாரிப்புக்கும் இடையே உள்ள வித்தியாசம்தான். பட்டாது தயாரிப்பிலும் விபத்துக்கள் நேரிடலாம்; ஆனால்வெடிகுண்டு தயாரிப்பினால்தான் ஆபத்து அதிகம்.

பட்டாசினால் வேடிக்கைக்கும் இடமுண்டு ; வெடிகுண்டினால் வேதனைக்கு மட்டுமே இடம்.

வீரமணி, ஜெயலலிதா உறவு, ஜெயலலிதா உறவு - பட்டாஸ் தயாரிப்பு ; நெடுமாறன் - மாநில முதல்வர் உறவு - வெடி குண்டு தயாரிப்பு.

கே: நிர்வாகம் என்பது ஒருவரது அறிவைப் பொறுத்ததா, திறமையைப் பொறுத்ததா?

ப: அதிகாரிகளின் திறமை, அமைச்சர்களால் அறிவுடன் பயன்படுத்தப்படுகிறதா, இல்லையா, என்பதை பொறுத்தது, நிர்வாகத்தின் வெற்றியும்,தோல்வியும்.

கே: ஜெயலலிதாவுக்கெதிரான தீரப்பால் அ.தி.மு.க. பிளவுபடுமா?

ப: தேர்தலில் அ.தி.மு.க. தோற்றால் - அப்போது இந்தத் தீர்ப்பினால் அக்கட்சி பிளவுபடும். அதுவரை இந்தத் தீர்ப்பின் விளைவுகள் தள்ளிப்போடப்படும்.

கே: வீரப்பனுடன் பேச்சு வார்த்தை நடத்த கர்நாடகா சார்பில், பிரதிநிதி ஒருவரையும் அனுப்பியிருக்க வேண்டும் என்ற ராமகிருஷ்ண ஹெக்டேயின்குற்றச்சாட்டு பற்றி ...?

ப: அரசு பிரதிநிதி சென்றிருக்க வேண்டும் என்பதை முதலிலேயே நான் சொல்லியிருந்தேன். அதனால், ஹெக்டே சொல்லியிருப்பது எனக்கு உடன்பாடே.


கே: டாக்டர் ராமதாஸ், வாழப்பாடி ராமமூர்த்தி இருவரும் தங்களுக்குள் நடத்தி வரும் சண்டையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுரைகூறியிருக்கிறாரே முதல்வர் கருணாநிதி?

ப: இப்போது இத்துடன் முதல்வர் நிறுத்தியிருக்கிறார். ராமதாஸ் போனால் பரவாயில்லை என்ற அவருடைய இன்றைய சிந்தனை மாறி. ராமதாஸ்கூட்டணியில் இருப்பது அவசியம் என்று அவர் நினைக்க ஆரம்பித்தால் - வாழப்பாடி வாயை மூடிக்கொள்ள வேண்டும் என்றும் சொல்வார்.

இப்போது வாழப்பாடி ராமமூர்த்தி, ராமதாசை அடக்க பயன்படுவதாக முதல்வர் நினைக்கிறார் ; ராமதாஸ் உறவு தேவை என்ற நினைப்பு வந்தால்,அப்போது வாழப்பாடியின் காலை வாரிவிட்டு, ராமதாசை திருப்திப்படுத்துவார். ஆக, வாழப்பாடி உறவு இருந்தாலும் ஆயிரம் பொன் ; அந்த உறவுமுறிந்தாலும் ஆயிரம் பொன்.

கே: வருங்காலத்தில் சந்தனக்கடத்தல் வீரப்பனின் வாழக்கை, வரலாறாக வெளிவருமா?

ப: ஏன்? தனித் தமிழ்நாடு உருவாகித்தான் தீரும் என்ற முடிவுக்கு வந்து விட்டீர்களா?

கே: ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் விடுதலை அளித்தால் நீதி வென்றது என்று கூறுகிறார். தண்டனை அளித்தால் பழி வாங்கும் படலம் என்றுகூறுகிறார். இதை விசித்திரம் என்பதா? முரண்பாடு என்பதா?

ப: தன் வழக்கு தோற்கும் போது, நீதி வென்றது என்று சொன்னவர் இதுவரை எவரும் இல்லை. ஜெயலலிதா சரித்திரம் படைக்க வேண்டும் என்றுஎதிர்பார்ப்பது நியாயமல்ல.

கே: 2001-ல் முதல்வர் கருணாநிதி தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்வாரா? தவற விட்டு விடுவாரா?

ப: ஜெயலலிதாவே, த.மா.கா.,காங்கிரஸ் போன்ற கட்சிகளை விரோதித்துக் கொண்டு, தி.மு.க.வுக்கு உதவினால் ...? அல்லது கருணாநிதியேய,பா.ம.க. வை உதறி ஜெயலலிதாவுக்கு உதவினால் ...? அல்லது.த.மா.கா. , காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் வேறு பல ( நீதிக் கட்சி, யாதவர் கட்சி,விடுதலை சிறுத்தைகள் போன்றவை) கட்சிகளோடு, மூன்றாவது அணி அமைத்து ஓட்டுகளைப் பிரித்தால் ... ? ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாதுஎன்ற நிலை உறுதியாகி விட்டால் ... ? அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வர நான் விரும்பவில்லை. கொஞ்சம் போகட்டும்.

கே: உங்கள் பார்வையில் பா.ம.கா. நேற்று , இன்று, நாளை - உங்கள் கணிப்பு என்ன?

ப: மரம் வெட்டி ; கூட்டணி வெட்டி ; சுய வெட்டி.

கே: அரசு தூதர் கோபாலோடு,நெடுமாறன், கல்யாணி, சுகுமாறன் ஆகியோரை அனுப்ப வேண்டுமென்று வீரப்பன் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கை,யார் மூலம், எப்படி வந்தது என்று பத்திரிக்கையாளர்களுக்குச் சொல்ல முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறாரே?

ப: பிரபாகரன் மூலமாக வந்த கோரிக்கையாக இல்லாமல் இருந்தால் சரி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+