இலங்கைத் தமிழர்கள் படுகொலை .. கம்யூ. கண்டனம்
சென்னை:
இலங்கையில் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 27 இலங்கைத் தமிழர்கள்சிங்களர்களால் படுகொலை செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்தமிழ்நாடு பிரிவு கண்டனம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் மத்திய பகுதியில் பண்டாரவேலாவில் மறுவாழ்வு முகாம் உள்ளது.இங்கு இலங்கைத் தமிழர்கள் பலர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். சில நாட்களுக்கு முன்இந்த முகாமுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த சிங்களர்கள் சிலர், அங்கிருந்த 27இலங்கைத் தமிழர்களைப் படுகொலை செய்துவிட்டு ஓடிவிட்டனர்.
இந்த படுகொலைக்கு பல உலக அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கடுமையானகண்டனத்தைத் தெரிவித்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடுபிரிவும் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கையில் மனித உயிர்களுக்கு எந்த மரியாதையும், மதிப்பும் இல்லைஎன்பதைத்தான் இப் படுகொலைகள் காட்டுகின்றன. மேலும், இலங்கையில் மனிதஉரிமைகள் மீறப்படுகின்றன என்பதையும் காட்டுகின்றன என்று கூட்டத்தில் பேசியதலைவர்கள் பேசினர்.
இலங்கையில் இதுபோன்ற படுகொலைச் சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாமல்தடுக்க அதிபர் சந்திரிகா குமாரதுங்கா நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் என். சங்கரய்யாதெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications