கருணாநிதியைக் குறை கூற ஜெ. யார்? .. வாழப்பாடி
திருச்சி:
தமிழக முதல்வர் கருணாநிதி, தனக்கு எதிராக வன்முறையைத் தூண்டி விடுவதாகஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளதற்கு தமிழக ராஜீவ் காங்கிரஸ்தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், யார் வன்முறையைத் தூண்டிவிடுவது என்று மக்களுக்குத் தெரியும். டான்சி வழக்கில் தீர்ப்பு வந்ததும்,தொண்டர்களைத் தூண்டி விட்டு பஸ்களை எரித்தவர் ஜெயலலிதா என்பதுமக்களுக்குத் தெரியும்.
தர்மபுரியில் விவசாயக் கல்லூரி மாணவிகள் சென்ற பஸ்சை எரித்தது, அதிலிருந்தமூன்று மாணவிகள் உயிரிழந்தது ஆகியவற்றிற்கு ஜெயலலிதாதான் காரணம் என்பதைமக்கள் மறந்து விடவில்லை. மக்கள மனதிலிருந்து அவை இன்னும் அகலவில்லை.
வன்முறையைத் தூண்டி விட்டு ஆரவரிக்கும் ஜெயலலிதா, கருணாநிதி குறித்துக் குறைகூற அருகதை இல்லை.
நாட்டில் அவசரகால நிலையைக் கொண்டு வந்ததற்காக மக்களிடம் மன்னிப்புகேட்டவர் இந்திரா காந்தி. அதேபோல, தான் செய்த தவறுகளுக்கு பொதுமக்களிடம்கேட்க இப்போதும் ஜெயலலிதாவுக்கு அவகாசம் உள்ளது. இந்திராவின் வழியைஜெயலலிதாவும் பின்பற்ற வேண்டும். அப்படிச் செய்தால் மக்களிடம் மன்னிப்புகிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்குக் கிடைத்துள்ள தீர்ப்பின் மூலம் ஆறுஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது. ஹைகோர்ட் அல்லதுசுப்ரீம் கோர்ட்டில், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு டிஸ்மிஸ் செய்யப்பட்டால் மட்டுமேஜெயலலிதாவால் தேர்தலில் போட்டியிட முடியும் என்றார் வாழப்பாடி.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications