Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தகவல் தொழில்நுட்ப மையம் அமைக்கிறது ஃபோர்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஃபோர்டு மோட்டார் கம்பெனியின் புதிய தகவல் தொழில் நுட்ப மையம் தமிழகத்தில்அமையவுள்ளது.

இதுதொடர்பாக, போர்டு இந்தியா நிறுவனத்திற்கு, டைடல் பூங்காவில் 90,000 சதுரஅடி பரப்புடைய ஒரு முழு தளத்திற்கான ஒதுக்கீட்டு ஆணையை அந்நிறுவனத்தின்மேலாண்மை இயக்குனர் ஃபில் ஸ்பென்டரிடம் முதல்வர் கருணாநிதி புதன்கிழமைவழங்கினார்.

போர்டு மோட்டார் கம்பெனி இந்தியாவில் பல்வேறு இடங்களை விரிவாக ஆய்வுசெய்த பின்னர், ஆசியா பசிபிக் மண்டலத்தில் அதன் புதிய தகவல் தொழில்நுட்பமையத்தை நிறுவுவதற்கு சென்னையைத்தேர்வு செய்துள்ளது.

இந்த தகவல் தொழில்நுட்ப மையம் சென்னையில் உலகத் தரத்திற்கு இணையாகஅமைந்துள்ள டைடல் பூங்காவின் ஒரு தளம் முழுவதிலும் அமையும். இத் திட்டம்படிப்படியாக நிறைவேற்றப்படும்.

திட்டம் முழுமைக்கும் 2,500 சாப்ட்வேர் பணியாளர்கள் தேவைப்படுவார்கள். முதல்கட்டமாக 600 பேர் நியமிக்கப்படுவார்கள். இத்திட்டத்திற்காக ரூ. 200 கோடிக்கு மேல்முதலீடு செய்யப்படவுள்ளது.

இத்தகவல் தொழில்நுட்ப மையம், ஃபோர்டு தகவல் தொழிநுட்ப மையம் பிரைவேட்லிமிடெட் என்னும் நிறுவனத்தின் கீழ் செயல்படத் தொடங்கும். இத் தகவல்தொழில்நுட்ப மையம் ஃபோர்டு மோட்டார் கம்பெனிக்கு இரண்டு வழிகளில் உதவும்.

1.இந்தியாவிலும், ஆசிய பசிபிக் மண்டலத்திலும் ஃபோர்டு நிறுவனம், தகவல்தொழில்நுட்பப் பணிகளில் ஈடுபடும்.

2.இந்தியத் தொழில் நுட்ப நிபுனர்களின் ஆதரவுடன், உலக அளவில் தகவல்தொழில்நுட்பம் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தும்.

இந் நிறுவனம்,சென்னையில் 1,700 கோடி முதலீட்டில் ஏற்கனவே அமைத்துள்ளபயணிகள் கார் தொழிற்சாலை தற்பொழுது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

மேலும் ஃபோர்டு ஏசியா பசிபிக் மற்றும் உலகெங்கும் அமைந்துள்ள ஃபோர்டுநிறுவனங்களின் ஒருங்கிணைப்பிற்காக ஃபோர்டு பிசினஸ் சர்வீஸ் சென்டர்ஒன்றையும் இந்நிறுவனம் சென்னையில் அமைத்துள்ளது.

ஏறத்தாழ 16 ஆயிரம் பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு மேற்பட்ட வருவாயைக்கொண்டுள்ளது ஃபோர்டு நிறுவனம். இந் நிறுவனம் உலகின் இரண்டாவதுமிகப்பெரிய மோட்டார் வாகன தொழில் நிறுவனமாகும்.

இந்நிறுவனத்தின் பெருமைக்குரிய தகவல் தொழில்நுட்பத் திட்டத்தை சென்னைக்குஈந்துள்ளது உண்மையிலேயே தமிழக அரசினுடைய சாதனையாகும்.

இத்துடன், தகவல் தொழில்நுட்ப மென்பொருள் தொழில்களுக்கு பயன்படும்வண்ணம் 10 லட்சம் சதுர அடி பரப்பளவில், தமிழ்நாடு அரசு மிக உயரிய தரத்தில்உருவாக்கியுள்ள டைடல் பூங்கா தனது 100 சதவீத வர்த்தகத்தை தற்போதுமுடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

டைடல் பூங்கா, ஆசியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்களில்ஒன்றாகும். ஓர் ஆண்டு காலத்திற்குள் முழு (100 சதவீதம்) இடப் பரப்பினையும்தொழில் வர்த்தகத்திற்கு பயன்படுத்தி சாதனை படைத்துள்ளதில் இதுவே முதலாவதுதொழிற் பூங்காவாகும்.

டைடல் பூங்காவில் செய்யப்பட்டுள்ள குளிர்சாதன வசதி, மின்வசதி,மின் தூக்கிகள்,தகவல் தொடர்பு முறைகள், உயர்த்திகள் போன்ற வசதிகள் அனைத்துஒப்பந்தக்காரர்களையும் திருப்பதிபடுத்தும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

டைடல் பூங்காவில் 32 மென்பொருள் கம்பெனிகள் இடம் பெற்றுள்ளன. அவைகளில்பல பன்னாட்டு நிறுவனங்களும், உள்நாட்டின் பெரிய நிறுவனங்களும் பல புதியதொழில் நிறுவனங்களும் அடங்கியுள்ளன.

அதாவது 50 சதவீத கம்பெனிகள் அமெரிக்காவைச் சார்ந்தவை. 40 சதவீதகம்பெனிகள் இந்தியாவின் பெரிய நிறுவனங்கள். 5 சதவீத நிறுவனங்கள் புதிதாகதொடங்கப்படும் கம்பெனிகள், 5 சதவீத கம்பெனிகள் ஐரோப்பிய நாடுகளைச்சார்ந்தவை.

இதன் தொழில்நுட்ப வர்த்தக வெற்றிகளை கருத்தில் கொண்டு, டைடல் பூங்கானுடையதிறப்பு விழாவின் பொழுது முதல்வர் இரண்டாவது டைடல் பூங்காஉருவாக்கப்படுமென அறிவித்தார். அதனைத் தொடங்குவதற்குரிய நடவடிக்கைகள்தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+