பெங்களூரில் தமிழ் படம் திரையிட எதிர்ப்பு
பெங்களூர்:
கன்னட சினிமா தயாரிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் பெங்களூரில்தமிழ் திரைப்படங்கள் திரையிடுவதை நிறுத்த வேண்டும் என கன்னட சலுவாலிசமிதியைச் சேர்ந்தவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னட நடிகர் ராஜ்குமார், வீரப்பனால் கடத்தப்பட்டு பிணைக் கைதியாக உள்ளார்.ராஜ்குமார் கடத்தப்பட்ட பின்பு கன்னடப் படங்களின் படப்பிடிப்பு ரத்துசெய்யப்பட்டது. பிற மொழிப் படங்கள் திரையிடப்பட்டாலும் கூட தமிழ் படம்மட்டும் கன்னட பிற்போக்கு அமைப்புகளின் நெருக்குதல் காரணமாகதிரையிடப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் தீபாவளி முதல் தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்டன. தீபாவளிக்குத்தமிழ்ப் படங்களைத் திரையிட்டால் நல்ல வசூல் கிடைக்கும் என்பதால் தமிழ்ப்படங்களுக்கு "தற்காலிகமாக தடை நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில் பெங்களூரில் தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படுவதை நிறுத்தவேண்டும் என கன்னட சலுவாலி சமிதியின் தலைவர் நாராயணகுமார் எச்சிரிக்கைவிடுத்துள்ளார்.
அவர் பெங்களூரில் செவ்வாய்க் கிழமையன்று கூறுகையில், ராஜ்குமார் கடத்தப்பட்டு90 நாட்களாகி விட்டன. அவர் கடத்தப்பட்டது முதல் கன்னட சினிமாத் தயாரிப்புப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் பெங்களூரில் தமிழ் சினிமாக்கள்திரையிடப்படுகின்றன. இதை உடனே நிறுத்த வேண்டும்.
நவம்பர் 1-ம் தேதி நள்ளிரவிற்குள் ராஜ்குமார் வரவில்லையென்றால் நவம்பர் 9-ம்தேதி முதல் தமிழக அரசுக்கு எதிராக தொடர் போராட்டம் நடக்கும்.
ராஜ்குமாரை கடத்தி வைத்துக் கொண்டு தமிழை இரண்டாவது ஆட்சி மொழியாக்கவேண்டும், காவிரி தண்ணீரை தமிழகத்திற்கு தரவேண்டும் என கேட்பது தவறானது.
ராஜ்குமாருக்கு எதிரான பிரச்சாரத்தில் தமிழர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதைஅவர்கள் நிறுத்த வேண்டும். ராஜ்குமாரை மீட்க தமிழ்நாடு அரசும், மத்திய அரசும்முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
ராஜ்குமாரை மீட்கும் நடவடிக்கையில் மெத்தனம் காட்டிக் கொண்டு, அவர் காட்டில்நலமுடன் இருக்கிறார் என முதல்வர் கிருஷ்ணா கூறுவது கன்டனத்திற்குரியது.
கர்நாடகாவில் 45 லட்சம் தமிழர்கள் இருப்பதால் வாக்குச் சீட்டை தமிழில் அச்சிடவேண்டும் என தேர்தல் கமிஷனிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதை தேர்தல்கமிஷன் ஏற்கக்கூடாது. இங்கு 45 லட்சம் தமிழர்கள் இல்லை, குறைவாகவே உள்ளனர்என்று அவர் கூறினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications