உதயமானது இந்தியாவின் 26-வது மாநிலம்

Subscribe to Oneindia Tamil

ராய்ப்பூர்:

Chatishgarஇந்தியாவின் 26-வது மாநிலமான சட்டீஸ்கர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. புதிய மாநிலத்தின் முதல் முதல்வராக காங்கிரஸ்கட்சியின் அஜித் ஜோகி பதவியேற்றுக் கொண்டார்.

புதிய முதல்வருக்கு, புதிய கவர்னர் தினேஷ் நந்தன் சாஹே பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். ஜோகி பதவியேற்பதற்கு 35நிமிடங்களுக்கு முன்பு, கவர்னராக தினேஷ் சாஹே பதவியேற்றுக் கொண்டார். தற்காலிக தலைமை நீதிபதி ஆர்.எஸ்.கார்க் அவருக்குப் பதவிப் பிரமானம் செய்துவைத்தார்.

சட்டீஸ்கார் பகுதியில், நக்சலைட்டுக்களின் மிரட்டல்கள் இருப்பதால் ராய்ப்பூர் போலீஸ் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புகளுக்கிடையே பதவியேற்புவிழா நிகழ்ச்சி நடந்தது.

முன்னதாக, சட்டீஸ்கர் சட்டசபை காங்கிரஸ் கட்சியின் தலைவராக அஜீத் ஜோகி தேர்வு செய்யப்பட்டார். அதற்கான கடிதத்தை கவர்னரிடம் கொடுத்த ஜோகி,தன்னை ஆட்சியைமக்க அழைக்குமாறு கோரிககை விடுத்தார்.

Ajith Jogiபதவியேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு கொளுத்தி தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். பதவியேற்பு விழாவில் மத்தியஅமைச்சர்கள் அத்வானி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், அருண் ஜெட்லி, ரமேஷ் பாய்ஸ் மற்றும் மத்தியப் பிரதேச முதல்வர் திக் விஜய் சிங் ஆகியோர் கலந்து கொண்டார்.

பதவியேற்றுக் கொண்டபின் பேசிய முதல்வர் அஜீத் ஜோகி, முதல் நடவடிக்கையாக மாநிலத்தில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும்,நக்ஸலைட்டுக்களின் பயமுறுத்தல்களிலிருந்து மாநிலத்தைக் காப்பாற்றவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்றார்.

முதல்வர் அஜித் ஜோகி

1,35, 100 சதுர கிலோ மீட்டர் கொண்டது சட்டீஸ்கர் மாநிலம். தலைநகராக ராய்ப்பூர் அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் பிலாஸ்பூரில் அமையவுள்ளது.மொத்த மக்கள் தொகை சுமார் 2 கோடி. மொத்தம் 16 மாவட்டங்கள் உள்ளன. 40 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட சட்டசபை உள்ளது. 11எம்.பிக்கள் உள்ளனர்.

சட்டீஸ்கரைச் சுற்றி, மத்திய பிரதேசம், பீகார், உத்தர பிரதேசம், ஆந்திரா, ஒரிசா ஆகிய மாநிலங்கள் உள்ளன.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+