பாமாயில் வந்தது .. தேங்காய் எண்ணெய் சென்றது
திருவனந்தபுரம்:
கேரள மக்களால், எண்ணெய்களின் தாய் என்று வர்ணிக்கப்படும் தேங்காய் எண்ணெயின் பயன்பாடுஅம்மாநிலத்தில் குறைந்து வருகிறது.
தேங்காய் எண்ணெயின் தேவை குறைந்து, அது அழியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கியக் காரணம்மக்களின் கவனம் பாமாயிலின் பக்கம் சென்றதுதான். 1999 ம் வருடம் முதல் கேரள மக்கள் பெரிதும் விரும்பிவாங்குவது பாமாயிலைத்தான்.
1999 ம் வருடம் கொச்சி துறைமுகத்திற்கு 37 டிரம்களில் 1,02,368 டன் பாமாயில் வந்திறங்கியது. ஆனால் இந்தவருடம் ஏற்கனவே 29 டிரம்களில் 95, 704 டன் பாமாயில் வந்திறங்கி விட்டது.
இதுகுறித்து வேளாண்துறை அமைச்சர் கிருஷ்ணன் கூறுகையில், அடிப்படையில் தேங்காய் எண்ணெயின் விலைமிகவும் அதிகம். மேலும் தேங்காய் எண்ணெய் உபயோகப் படுத்துபவர்கள் அதிக அளவு மாரடைப்பு நோயால்பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்ற செய்தி பரவியதையடுத்து மக்கள் தேங்காய் எண்ணெய் உபயோகிப்பதைதவிர்த்து வருகிறார்கள்.
இதனால் பொதுமக்களின் கவனம் இயல்பாக பாமாயில் பக்கம் சென்று விட்டது. இதே நிலை நீடித்தால் தேங்காய்எண்ணெய் விற்பனை சரிவை நோக்கிச் செல்லும் என்றார்.
கடந்த வருடம் தேங்காய் எண்ணெய் விலை கிலோ ஒன்றுக்கு ரூ 68 ஆகவும், பாமாயிலின் விலை ரூ 37 ஆகவும்இருந்தது. ஆனால் இந்த வருடம் இரண்டின் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்த வருடம் தேங்காய் எண்ணெயின் விலை ரூ 68 லிருந்து ரூ 35 ஆகவும், பாமாயில் ரூ 37 லிருந்து ரூ 25ஆகவும் குறைந்துள்ளது. தற்போது கேரளாவிலுள்ள விவசாயச் சங்கத்தினர், சுற்றுப்புறச் சூழல் நிறுவனங்கள்மற்றும் பலர் பாமாயில் இறக்குமதி செய்வதைத் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சுகாதார நிபுணர் சி.ஆர்.சோமன் கூறுகையில், பாமாயிலோ அல்லது தேங்காய் எண்ணெயோஎதுவானாலும் அவற்றை நுகர்வோரின் தேர்வுக்கு விட்டுவிட வேண்டும்.
தேங்காய் எண்ணெய் உபயோகிப்பவர்களுக்கு 89 சதவீத கொழுப்பு சத்து இருப்பதாகவும், பாமாயில்உபயோகிப்பவர்களுக்கு 48 சதவீத கொழுப்பு சத்து இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கொழுப்பு சத்து அதிகம் இருப்பதால் கொலஸ்ட்ரால் ஏற்படுகிறது. கேரள மக்களின் உடலில் அதிகம் கொழுப்புசேருவதற்கு, அவர்கள் தேங்காய் எண்ணெயை அதிகம் உபயோகிப்பதே காரணம் என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications