"அண்ணாவரு இல்லாத "ராஜ்யோத்சவா
பெங்களூர்:
"அண்ணாவரு ராஜ்குமார் இல்லாத முதல் "ராஜ்யோத்சவா விழாவை கர்நாடக மாநிலம்மிகவும் அமைதியாக கொண்டாடியது.
கர்நாடக மக்களால் "அண்ணாவரு (அண்ணா) என்று பிரியமாக அழைக்கப்படுபவர் நடிகர்ராஜ்குமார். கன்னடத்து எம்.ஜி.ஆர். என்றும் இவருக்கு பெயர் உண்டு.
தற்போது வீரப்பனால் ராஜ்குமார் கடத்தப்பட்டு 94 நாட்கள் ஆகின்றன. வெற்றிகரமான100-வது நாளை நோக்கி என்று கூறும் அளவுக்கு ராஜ்குமார் விடுதலை இப்போதைக்குசாத்தியமில்லாததாகத் தோன்றுகிறது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் உதயமான நாள் புதன்கிழமை அம்மாநிலம் முழுவதும்கொண்டாடப்பட்டது. ராஜ்யோத்சவா என்று அழைக்கப்படும் இந்த நாளை வழக்கமாககர்நாடக மக்கள் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடுவது வழக்கம். இம்முறையும்கொண்டாட்டம் இருந்தது. ஆனால் உற்சாகம் மட்டும் "மிஸ்ஸிங்.
ராஜ்யோத்சவா தினத்தன்று ராஜ்குமாரின் ரசிகர்கள் மாநிலம் எங்கும் கர்நாடகத்தின்இருவண்ணக் கொடியை (மஞ்சள், சிவப்பு) கட்டிக் கொண்டும், ராஜ்குமாரின் கர்நாடக தேசபக்திப் பாடல்களைப் ஒலிபரப்பியும் உற்சாகமாக இருப்பார்கள். இம்முறை அவர்களால்சந்தோஷமாக அதை செய்ய முடியவில்லை.
ராஜ்யோத்சவா தினத்தன்று ராஜ்குமார் நாட்டில் இல்லாமல் இருப்பதும் இதுவே முதல்முறையும் ஆகும். தீபாவளியை அவர் காட்டில் கொண்டாடினார். தற்போது கர்நாடக உதயதினத்தையும் அவர் காட்டில் கொண்டாடுகிறார்.
ராஜ்யோத்சவா தினத்தையொட்டி கர்நாடக மாநில அரசு பல்வேறு துறைகளில் சிறந்துவிளங்குவோருக்கு ராஜ்யோத்சவா விருதுகளை (தமிழக அரசின் கலைமாமணி விருதுபோல) வழங்கும். இம்முறையும் 51 பேர் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.இவர்கள் தவிர 5 அமைப்புகளும் விருது பெறுகின்றன.
ராஜ்குமார் இல்லாத நிலையில் ராஜ்யோத்சவா தினத்தைக் கொண்டாடுவதை அரசு தவிர்க்கவேண்டும் என்று கன்னட வேதிகே என்ற அமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது.ராஜ்யோத்சவா விருது வழங்கும் விழாவையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் அதுகோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் விழாக்களை அரசு ரத்து செய்யவில்லை.
அரசு விடுமுறை அளித்திருந்தாலும் கூட "அண்ணாவரு இல்லாததால், கர்நாடக மக்கள்சற்று உற்சாகக் குறைவுடனேயே தங்களது மாநில உதய தினத்தை கொண்டாடிமுடித்தார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications