முன்னாள் எம்.எல்.ஏ.மகன் மீது துப்பாக்கிச் சூடு

Subscribe to Oneindia Tamil

மதுரை:

திண்டுக்கல் மாவட்டம் பாலப்பநாயக்கன்பட்டி பகுதியில், நடந்த துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.அவருடன் வந்திருந்த 2 பேர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் குறித்துப் போலீஸார் கூறுகையில், நத்தம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.ஆண்டி அம்பலத்தின் மகன் உள்பட மேலும் இரண்டு பேர் மீது,அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த சுப்பய்யா என்பவர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டார்.

இச்சம்பவத்தில் காயமடைந்த அவரது கார் டிரைவர் மற்றும் இன்னொருவர் பலத்த காயங்களுடன் அரசு ராஜாஜி மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆண்டி அம்பலத்திற்கும், அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த சுப்பைய்யா என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் சுப்பய்யாபழி வாங்கும் நோக்கத்தில் ஆண்டி அம்பலத்தின் மகன் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர்.

சுப்பய்யாவை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+