டைரக்ட் டூ ஹோம் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி:
ஒலிபரப்புத் துறையில், புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வர உதவும் என்றுஎதிர்பார்க்கப்படும் டைரக்ட் டூ ஹோம் (டி.டி.எச்) திட்டத்திற்கு மத்திய அமைச்சரவைவியாழக்கிழமை ஒப்புதல் கொடுத்தது.
டி.டி.எச். திட்டம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி தலைமையிலானஎட்டு அமைச்சர்கள் கொண்ட குழு ஆய்வு செய்தது. அதன் இறுதியில், திட்டத்திற்குஅனுமதி வழங்கலாம் என்று முடிவு செய்தது. இதையடுத்து டி.டி.எச். திட்டத்திற்குமத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
டி.டி.எச். திட்டத்தின் மூலம் சாட்டிலைட் டி.வி சானல் ஏதாவது ஒன்றைப் பார்க்கவிரும்பும் நேயர், கேபிள் டிவி. ஆபரேட்டரை சார்ந்திருக்கத் தேவையில்லை. சிறியஅளவிலான டிஷ் ஆன்டனாவை வைத்துக் கொண்டு 100-க்கும் மேற்பட்ட சாட்டிலைட்சானல்களைப் பார்க்க முடியும்.
கேபிள் ஆபரேட்டர்களால் நுழைய முடியாத கிராமங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிமக்களுக்கு மிகுந்த பயன் அளிக்கும் திட்டமாகும் இது.
தரமான ஒளி, ஒலி பரப்பு உள்பட பல வசதிகளும் இந்தத் திட்டத்தின் மூலம்நேயர்களுக்குக் கிடைக்கும். இன்டர்நெட் வசதி, ஈ மெயில் வசதி, வீட்டிலிருந்தேஷாப்பிங் செய்வது, வங்கிப் பரிவர்த்தனை, கல்வி ஆகிய வசதிகளும் டி.டி.எச்.திட்டத்தின் கீழ் நேயர்களுக்குக் கிடைக்கும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. இருப்பினும் பலகாரணங்களால் அதறகு ஒப்புதல் கிடைக்கவில்லை. அப்போது பிரமோத் மகாஜன்மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்தார்.
அத்வானி தலைமையிலான ஆய்வுக் குழுவில், நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா,பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர்சுஷ்மா வராஜ், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரமோத் மகாஜன், தகவல்தொடர்புத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், விண்வெளித் துறை அமைச்சர்வசுந்தரா ராஜே சிந்தியா, சட்டத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோரும்இடம்பெற்றிருந்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications