ஏரகரம் ஸ்ரீஸ்கந்தர் கோவில் கும்பாபிஷேகம்
கும்பகோணம்:
கும்பகோணத்திற்கு அருகே அமைந்துள்ள ஏரகரம் ஸ்ரீஸ்கந்தநாதர் திருத்தலத்தில் மகாகும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில்அமைந்துள்ளது ஏரகரம் கிராமம். இங்கு ஸ்ரீஸ்கந்தர் சன்னிதி கிழக்கு நோக்கிஅமைந்துள்ளது. தேவி ஸ்ரீ சங்கரநாயகியின் சன்னிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
இந்தக் கோயிலை திருநாவுக்கரசர், கச்சியப்ப முனிவர், குமரகுருபர சுவாமிகள்,அருணகிரிநாதர், நக்கீரர் ஆகியோர் புகழ்ந்து பாடியுள்ளனர்.
இந்தத் திருத்தலம் 12-ம் நூற்றாண்டில் விக்கிரம சோழரால் கட்டப்பட்டது எனகூறப்படுகிறது. இந்தக் கோவிலுக்கு மூக்கு வாக்கு சித்திஸ்தலம் என்ற பெயரும்உண்டு. அது பற்றி கூறப்படும் கதை:
குலோந்துங்க மன்னனுக்கு மூக்கு இல்லாமல் குழந்தை பிறந்தது. இதனால் மனம்வருந்திய மன்னன் ஜோதிடர்கள் கூறியதன் பேரில் ஸ்ரீஸ்கந்தரை வேண்டிக்கொண்டதனால் அந்தக் குழந்தைக்கு மூக்கு வந்ததால் முக்கு வாக்கு சித்திஸ்தலம் என்றபெயர் உண்டானது. மன்னனின் கண் நோயையும் இந்த இறைவன் தீர்த்து வைத்தார்.
தபோவன முனிவரால் சபிக்கப்பட்ட மந்தகன் என்ற அந்தணன் சாப விமோசனம்பெற்றதும் இந்தத் திருத்தலத்தில்தான். இங்கு அம்மனுக்கு வருடாவருடம்லட்சார்ச்சனை நடைபெறுவது மற்றுமொரு சிறப்பாகும்.
வேண்டியவருக்கெல்லாம் வேண்டியதை எல்லாம் இல்லையெனாது வாரி வழங்கிஅருள் புரியும் இறைவன் குடிகொண்டுள்ள இந்தக் கோவில் கும்பாபிஷேகம்வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் முலவருக்கும், தேவிக்கும்மற்றும் அங்குள்ள அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம்நடைபெறுகிறது
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications