அமைதிப் பேச்சு தொடர பிரபாகரன் நிபந்தனை
கொழும்பு:
இலங்கை அரசுடன் அமைதி பேச்சுவார்த்தையைத் தொடர விடுதலைப் புலிகள்இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால்நிபந்தனையும் விதித்துள்ளார்.
இலங்கையில் தனி ஈழம் கேட்டு கடந்த 17 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் போராடிவருகின்றனர். இது தொடர்பாக இலங் ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும்கடுமையான சண்டை நடந்து வருகிறது.
இதுவரை 60 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். இலங்கைஅரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த பல சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால், எந்த முடிவும் காணப்படவில்லை.
இதற்கிடையே இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு விடுதலைப் புலிகளுக்கும்,இலங்கை அரசுக்கும் நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்யத் தயாராகஇருப்பதாக நார்வே நாடு அறிவித்தது.
முதலில் இதை ஒப்புக் கொண்ட புலிகள் பின்னர் நார்வே நாட்டின் மத்தியஸ்தத்தைஏற்க மறுத்துவிட்டனர். இதனால், இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாமல்மேலும் காலதாமதமானது.
இந் நிலையில், இலங்கை அரசுடன் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடரவிரும்புவதாக விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கூறியுள்ளார்.
வன்னி காட்டுப்பகுதியில் அவரை, நார்வே நாட்டு அமைதித் தூதர் எரிக் சோலீம்தலைமையிலான அமைதிப் பேச்சுவார்த்தைக் குழு செவ்வாய்க்கிழமை சந்தித்துப்பேசியது.
அப்போது அக்குழுவிடம் தனது விருப்பத்தை பிரபாகரன் தெரிவித்ததாக லண்டனில்இருந்து வெளியிடப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் செய்திக்குறிப்பில்கூறப்பட்டுள்ளது.
இலங்கை ராணுவம் தனது தாக்குதலை முழுவதும் நிறுத்தவேண்டும் என்றநிபந்தனையுடன்தான் பேச்சுவார்த்தைக்கு பிரபாகரன் சம்மதம் தெரிவித்தார். நார்வேஅமைதிப் படையினருடன் பல விஷயங்கள் குறித்து பிரபாகரன் பேச்சு நடத்தினார்.
இந்த பேச்சு திருப்திகரமாக இருந்தது என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.கடந்த 14 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டு தூதுக் குழுவுடன் பிரபாகரன் பேச்சுநடத்தியது இதுவே முதன்முறை.
அப்பாவி தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் கடுமையான தாக்குதலை நடத்திவருகிறது. இதனால், ஏராளமான அப்பாவி தமிழர்கள் பலியாகியுள்ளனர். இலங்கைஇனப் பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண இலங்கை அரசு அக்கறைகாட்டவில்லை என்று இலங்கை அரசு மீது பிரபாகரன் குற்றம் சுமத்தியதாக புலிகளின்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இது தவிர, அமைதிப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க வேண்டுமானால் தமிழர்கள்மீதான தாக்குதலை இலங்கை ராணுவம் நிறுத்த வேண்டும் என்பது மட்டுமல்ல,தமிழர்கள் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்வதுடன்,வடகிழக்கு இலங்கைப் பகுதியில் அமைதி நிலவுவதற்கான ஏற்பாடுகளையும்இலங்கை அரசு மேற்கொள்ளவேண்டும் என்ற நிபந்தனைகளையும் பிரபாகரன்தெரிவித்துள்ளார்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications