தாயைக் கொன்று பிணத்துடன் 2 நாள் இருந்தவர்
கோவை:
தாயை வெட்டிக் கொலை செய்து விட்டு பிணத்துடன் 2 நாள் இருந்தவருக்கு 3ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோவை அருகே உள்ள சூலூரைச் சேர்ந்தவர் மயில்சாமி (44). இவர் தனது தாயார்அம்மாசை (72) உடன் வசித்து வந்தார்.
மயில்சாமி எந்த வேலையுமின்றி ஊர் சுற்றிக் கொண்டு ஊதாரித் தனமாகஇருந்துள்ளார். ஆனால் அவரது தாயார் அம்மாசை தள்ளாத வயதிலும் வேலைக்குச்சென்று சாப்பாட்டிற்குச் சம்பாதித்து வந்தார். இதனால் இருவருக்கும் இடையேஅடிக்கடி சண்டை வந்தது.
ஒரு நாள் அம்மாசை, மயில்சாமியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டுச் சென்றுவிட்டார். பின்னர் மறுநாள் வீடு திரும்பினார். வீடு திரும்பிய தனது தாயாரிடம்மீண்டும் பணம் கேட்டு சண்டை போட்டுள்ளார். பணம் கொடுக்க மறுத்ததால் அவரைஅரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில்அம்மாசை இறந்து போனார்.
தாயர் இறந்து போனதை அறிந்த மயில்சாமி, வெளியே வந்தால் போலீசார் பிடித்துக்கொள்வர் என நினைத்து இறந்து போன தாயாருடன் வீட்டை விட்டு வெளியேவராமல் இருந்துள்ளார்.
இரண்டு நாட்கள் சென்றதும் வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது.அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டிற்குள் என்ன நடக்கிறது என உள்ளேபார்த்துள்ளனர்.
அங்கே மயில்சாமி இறந்து போன தாயாருடன் பயந்த நிலையில் இருந்ததைக்கண்டனர். இது குறித்து கிராம நிர்வாக அதிகாரிக்குத் தகவல் கொடுத்தனர். இந்தசம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்துமயில்சாமியைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு கோவை தலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி வாசுகிமுன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதி, மயில்சாமிக்கு 3ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications