வீரப்பன் இன்னும் அழைக்கவில்லை.. நெடுமாறன்
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பன், எப்போது மீண்டும் காட்டுக்கு வர வேண்டும் என்று கூறுகிறாரோ, அதற்குப்பின் தான் அரசுத் தூதர்கள் குழுகாட்டுக்குச் செல்லும் என்று தமிழ் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:
வீரப்பனிடமிருந்து இன்னும் எங்களுக்கு முறையான அழைப்பு வரவில்லை. அவரது அழைப்புக்காகக் காத்திருக்கிறோம். வீரப்பனிடமிருந்து அழைப்பு வந்தபின் நான், கோபால், சுகுமாறன், பேராசிரியர் கல்யாணி ஆகியோர் அடுத்த முறையாகக் காட்டுக்குச் செல்வோம். இதில் எந்த மாற்றமும் இல்லை.
மீண்டும் காட்டுக்குச் செல்வது குறித்து, தமிழகக், கர்நாடக அரசுகள் அனுமதி வழங்கியபின் தூதர்கள் குழு காட்டுக்குச் செல்லும். தூதர்கள் குழுவைசந்திப்பதில் வீரப்பன் ஏன் தாமதம் காட்டுகிறார்? அவர் மெளனம் சாதிப்பதன் காரணம் என்ன என்பது குறித்து எதுவும் தெரியவில்லை.
இருப்பினும், சுப்ரீம்கோர்ட்டில், வீரப்பன் விடுவிக்கக் கோரிய தடா கைதிகள் குறித்தான வழக்கின் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால்இவ்விஷயத்தில் வீரப்பன் தாமதம் ஏற்படுத்தலாம். வீரப்பனின் மனநிலை என்ன என்பது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது என்றார்.
முன்னதாகக், கடந்த ஜூலை மாதம் 30 ம் தேதி கன்னட நடிகர் ராஜ்குமார், வீரப்பனால் கடத்தப்பட்டார். அவருடன் கடத்தப்பட்ட நாகப்பா மற்றும்கோவிந்தராஜ் ஆகியோர் வீரப்பன் பிடியிலிருந்து தப்பித்து வந்து விட்டனர்.
தடா கைதிகளை விடுவித்தால்தான் ராஜ்குமாரை விடுவிக்க முடியும் என்று தனது நிலையில் வீரப்பன் உறுதியாக இருப்பதாலும், அவர் தனது பிடிவாதத்தைத்தளர்த்திக் கொள்ளாததாலும் ராஜ்குமார் விடுதலை இன்னும் சில நாட்கள் தாமதமாகலாம் என்று தெரிகிறது.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications