2 கோஷ்டிகளாக ஊர்வலம் போன திமுகவினர்

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவையில் நடந்த தி.மு.க. கோஷ்டி மோதலைத் தொடர்ந்து இருதரப்பினரும் தனித் தனியாகப் பேரணிநடத்தினர்.

கோவையில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. தண்டபாணியும், அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியும் நேருக்கு நேர்மோதிக் கொண்டனர். இந்த மோதலால் கோவை தி.மு.க. கிட்டத்தட்ட இரண்டாக பிரிந்துள்ளது.

அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா பேச்சைக் கண்டித்து கண்டனப் பேரணி நடத்த தி.மு.க திட்டமிட்டிருந்தது.திட்டமிட்டபடி நடக்கும் என அறிவிக்கப்பட்ட இந்த பேரணி, கோவை மாநகர் பகுதியில் சி. டி தண்டபாணிதலைமையிலும், புறநகர் மாவட்டத்தில் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையிலும் நடந்தது.

கோவையில் மாநகர் மாவட்டச் செயலராக எம்.எல்.ஏ.,தண்டபாணி தலைமை வகித்தார். இதில், 700 தி.மு.க. வினர்மற்றும் 8 பெண்கள் கலந்து கொண்டனர். செஞ்சிலுவைச் சங்கம் முன்பு துவங்கிய இந்தப் பேரணி, மாவட்டகலெக்டர் அலுவலகம், டவுன் ஹால் வழியாக தேர்முட்டித் திடலை அடைந்தது.

ஊர்வலத்தில் ஜெயலிலதா, சசிகலா போன்று வேடமணிந்த இரு பெண்கள் அழைத்து வரப்பட்டனர்.

கோவை புறநகர் தி.மு.க. சார்பில் கோவில்பாளையம் என்ற ஊரில் பேரணி நடந்தது. இந்தப் பேரணிக்கு கோவைதெற்கு மாவட்டச் செயலர் பதவி வகித்து வரும் விஜயலட்சுமி பழனிச்சாமி தலைமை வகித்தார். இதில், ராஜ்யசபாஎம்.பி. சுப்பையன், உடுமலை எம்.எல்.ஏ. தம்பு என்ற செல்வராஜ், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. அருண்குமார்உட்பட 500 பேர் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+