3 வது அணி உருவாகும் ..வடிவேலு நம்பிக்கை

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி:

தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் 3 வது அணி உருவாகும் என்று மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மாநிலத் தலைவர் ஜி.ஏ.வடிவேலு கூறினார்.

தர்மபுரியில் புதன்கிழமை அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசைக் கொள்கை ரீதியாக எதிர்த்துப் போராடும் ஒரே கட்சி ஜனதா தளம்தான். தமிழ்நாட்டில் வகுப்புவாத கட்சிகள்,சாதி பெயரால் ஏற்பட்டுள்ள கட்சிகள் உருவாகி வருகிறது. இது நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும். இதனால், இதுபோன்ற கட்சிகளைவளர விடக் கூடாது.

தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் 3 வது அணி உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அந்த அணிக்கு மூப்பனார் தலைவர் ஆகலாம்.

சென்னை நகரை அழகுபடுத்துகிறோம் என்று சொல்லிக் கொண்டு இருக்கிற குடிசைகளை எடுத்து அந்த பகுதியில் அனுமதி வழங்கப்படுவதை வன்மையாகக்கண்டிக்கிறோம்.

வருகிற 28 ம் தேதி சென்னையில் மத்திய அரசைக் கண்டித்து முன்னாள் பிரதமர் வி.பி.சிங் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது என்றார் ஜி.ஏ.வடிவேலு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+