வீரர்களிடம் பணம் பறிப்பு ..முன்னாள் ஒலிம்பிக் வீரர் குமுறல்
ஹிஸார்:
போட்டிகளுக்குத் தேர்வு செய்வதாகக் கூறி வீரர் மற்றும் வீராங்கனைகளிடம் பணம்பறிக்கப்படுவதாக விளையாட்டு அமைப்புகள் மீது முன்னாள் ஒலிம்பிக் வீரரும்,அர்ஜுன விருது பெற்றவருமான மல்யுத்த வீரர் உதய் சங் பால்வான் குற்றம்சுமத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு அமைப்புகளிலும் முறைகேடுகள்நடக்கின்றன. தேர்வு செய்கிறோம் என்ற பெயரில் வீரர் மற்றும்வீராங்கனைகளிடமிருந்து ஏராளமான பணம் பெறப்படுகிறது.
மல்யுத்த விளையாட்டு அமைப்பில் இத்தகைய மோசடி அதிகமாக உள்ளது. அதுவும்வீராங்கனைகளிடம் அதிக பணம் பெறப்படுகிறது. சமீபத்தில் மஞ்சு என்றவீராங்கனையிடம் ரூ.13 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது.
போலந்தில் சமீபத்தில் நடைபெற்ற உலக பெண்கள் மல்யுத்தப் போட்டியில் தேர்வுசெய்யப்படுவதற்காக மஞ்சுவிடமிருந்து மல்யுத்த விளையாட்டு அமைப்பு பணம்பெற்றுள்ளது.
போட்டியில் கலந்து கொள்ளும் மஞ்சுவுக்கு உபகரணங்கள் வாங்க அந்த பணத்தைமல்யுத்த விளையாட்டு அமைப்பு பெற்றுள்ளது. ஆனால், உபகரணங்களைஅமைப்பின் பணத்திலிருந்து வாங்கியதாக கணக்கு காட்டப்படுகிறது.
மஞ்சு தவிர மேலும் பல மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் பணம் பெறப்பட்டுள்ளது.மஞ்சு மட்டும் தைரியமாக அதைத் தெரிவித்துவிட்டார். மற்றவர்கள் வெளியேசொல்லவில்லை. அவ்வளவுதான்.
ஒரு போட்டியில் கலந்து கொள்ள ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவருக்கானஅனைத்து செலவுகளையும் அந்த குறிப்பிட்ட விளையாட்டு அமைப்புதான் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதைவிடுத்து வீரர், வீராங்கனைகளிடம் பணம் பெறக்கூடாது.
நான் மல்யுத்தப் போட்டியில் பங்கு கொண்ட காலத்திலிருந்தே இத்தகையமுறைகேடுகள் நடந்து வருகிறது. நான் போட்டிகளில் பங்கு கொள்ள என்னிடமும்பணம் பெறப்பட்டது.
ஒலிம்பிக்கில் இந்தியாவுக்குப் பதக்கம் கிடைக்காததற்கு நாட்டில் உள்ள விளையாட்டுஅமைப்புகளின் திறமையில்லாத செயல்பாடுதான் காரணம். மேலும், நாட்டின்விளையாட்டுக் கொள்கை சரியாக இல்லை.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும் விளையாட்டு அமைப்புகளுக்குத்தலைவர்களாக உள்ளனர். அவர்களைப் போன்றவர்கள் உருவாக்கும் விளையாட்டுக்கொள்கையால் எந்தப் பயனும் ஏற்படாது.
விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்களை விளையாட்டு அமைப்புகளுக்குப்பொறுப்பாளர்களாக நியமிக்கவேண்டும். விளையாட்டுக் கொள்கையும்மாறவேண்டும். அப்போதுதான் சர்வதேசப் போட்டிகளில் இந்தியாவுக்கு நிறையபதக்கங்கள் கிடைக்கும்.
யு.என்.ஐ.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications