ஐ.நா. உறுப்பினரானது யூகோஸ்லேவியா
ஐ.நா.சபை:
ஐக்கிய நாடுகள் சபையில் புதிய உறுப்பினராக யூகோஸ்லேவியா இடம்பெற்றுள்ளது.
பழைய யூகோஸ்லேவியா நாடு பிரிந்து கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.நா.சபையில் யூகோஸ்லேவியாவுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
1945 ம் ஆண்டு பழைய யூகோஸ்லேவியா ஐ.நா.சபையில் அடிப்படை உறுப்பினராக இடம் பெற்றிருந்தது. செர்பியா மற்றும் மான்டிநீக்ரோ ஆகியவைஅடங்கிய பழைய யூகோஸ்லேவியாவில் அதிபர் மிலேசோவிக் தலைமையில் ஆட்சி நடந்து வந்தது.
1992-ல் பழைய யூகோஸ்லேவியாவிலிருந்து, போஸ்னியா, குரோஷியா, மாசிடோனியா, ஸ்லவோனியா ஆகிய பகுதிகள் பிரிந்தன. இதனால்யூகோஸ்லேவியா நாட்டுக்கு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. பல நாடுகளாக பிரிந்த யூகோஸ்லேவியாவுக்கு ஐ.நா.வில்அங்கீகாரம் கொடுக்க முடியாது என்று ஐ.நா. கூறிவிட்டது.
இதற்கிடையே கடந்த மாதம் நடந்த தேர்தலின்போது அதிபர் மிலோசேவிச் பதவி நீக்கம் செய்யப்பட்டார். புதிய அதிபராக கோஸ்டுனிகாதேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய அதிபர் ஆனவுடன், ஐ.நா.சபையில், யூகோஸ்லேவியாவுக்கு மீண்டும் உறுப்பினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்று ஐ.நா.வுக்குகோரிக்கை விடுத்தார்.
கோஸ்டுனிகாவின் கோரிக்கையைப் பரிசீலித்த ஐ.நா., மீண்டும் யூகோஸ்லேவியாவுக்கு உறுப்பினர் அந்தஸ்து வழங்குவதாக அறிவித்தது.
தற்போது ஐ.நா.சபையில் 189 நாடுகள் உறுப்பினர்ராக உள்ளன. யூகோஸ்லேவியாவையும் சேர்த்து 190 நாடுகள் உறுப்பினராக உள்ளன.
![]()
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications