ஆஸ்திரிய பெண்ணைக் கற்பழித்துக் கொன்றவர் கைது
ஊட்டி:
சென்னை ஓட்டலில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பெண் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டவழக்கில், வலிபர் ஒருவரைப் போலீசார் ஊட்டியில் கைது செய்தனர்.
மும்பையைச் சேர்ந்த ஆஷாபட் என்பவர் ஆஸ்திரிய நாட்டில் பணியாற்றி வந்தார். கடந்தஜனவரி மாதம் 18ம் தேதி இந்தியாவிற்கு உறவினர்களைப் பார்க்க இந்தியாவிற்கு வந்தார்.
நண்பர்களைப் பார்க்க தமிழ்நாட்டிற்கு வந்த அவர் கோடம்பாக்கத்தில் உள்ள நயாகராஓட்டலில் தங்கினார். இந்த ஓட்டலில் அவர் கொலை செய்யப்பட்டு அவரிடமிருந்து பணம்மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பபைஏற்படுத்தியது.
இந்நிலையில், ஊட்டி கிளப் ரோட்டில் தேவராஜ் என்பவரிடம் ஒரு வலிபர் கத்தியைக்காட்டி மிரட்டி வாட்சைப் பறித்துச் சென்றார். இது தொடர்பாக ஜி.1 போலீசார் நெல்லைமாவட்டம், தேவிபட்டிணத்தைச் சேர்ந்த ராமராஜ் என்ற ராஜ்மோகனைக் கைது செய்தனர்.இவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது.
இந்த வாலிபர் போலீசாருடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது:
எனது தந்தை தங்கமலை,நெல்லை மாவட்டத்தில் பருத்தி ஏஜெண்டாக பணியாற்றி வந்தார்.அவர் இறந்த பிறகு எங்களது குடும்பம் வறுமையில் வாடியது. இதனால் டெக்ஸ்டைல்கடையில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கிருந்து ரூ.15 ஆயிரத்தை திருடிக் கொண்டுசென்னைக்குச் சென்றேன். சென்னையில் நயாக்ரா ஓட்டலில் ரூம் பாயாக வேலைக்குச்சேர்ந்தேன்.
அங்கு நான் வேலை செய்தபோது ஓட்டலின் மூன்றாவது மாடியில் ரூம் நம்பர் 410 ல் ஒருவெளிநாட்டுப் பெண் வந்து தங்கினார். அவர் மிகவும் அழகாக இருந்தார். அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், அவரது பெயர்ஆஷா பட் என்பதும் தெரிய வந்தது. அவரது ரூமிற்கு அடிக்கடி சென்று பணி செய்துவந்தேன்.
ஒரு நாள் இரவு என்னிடம் அவர் மினரல் வாட்டர் வாங்கி வரும்படி கூறினார். அவர்வெளிநாட்டுப் பெண் என்பதால், மதுக் குடிப்பார் என நினைத்து மது வேண்டுமா எனக்கேட்டேன். அவர் பீர் வாங்கி வரச் சொன்னார்.
பின்னர் அவரிடம், ஒரு முறை செக்ஸ் உறவு வைத்துக் கொண்டேன். கடந்த ஜனவரி மாதம்20-ம் தேதி அவரது ரூமிற்குச் சென்றபோது அவர் நல்ல போதையில் இருந்தார். அவரிடம்தவறாக நடக்க முயன்றேன். ஆனால் அவர் ரிஷப்ஷனில் சொல்லி விடுவதாக மிரட்டினார்.அதனால் திரும்பி விட்டேன்.
நள்ளிரவானபோது கத்தியை எடுத்துக் கொண்டு அந்தப் பெண்ணின் அறைக்குச்சென்றேன். ரூம் உள்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது. இதனால் பாத் ரூம் கண்ணாடியைஅகற்றி விட்டு உள்ளே குதித்தேன்.
அவர் போதையில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார். வெறும் ஜட்டியுடன் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது டி.வி ஓடிக் கொண்டிருந்ததால், சத்தமின்றி அவரது அறையில்இருந்த பொருட்களை எடுத்துக் கொண்டேன். இதில் ஆஸ்திரியா நாட்டுப் பணம் 750ம்,அவரது கழுத்தில் அணிந்திருந்த நகையை எடுக்க முயன்றேன்.
ஆனால் அவர் விழித்துக் கொண்டு ரிஷப்ஷனுக்குத் தகவல் தெரிவிக்க முயன்றார்.அப்போது நான் அவரைத் தடுத்து தலையணையால், அழுத்தினேன். நான் வைத்திருந்தகத்தியால் கழுத்தில் குத்தினேன். பின்னர் தங்கச் சங்கிலியை எடுத்துக் கொண்டு பாத்ரூம்வழியாக கீழே சென்றேன். அப்போது என் சட்டையில் ரத்தம் படிந்தது. எனவேசட்டையைக் கழற்றி விட்டேன்.
ஓட்டல் ஊழியர் ரமேஷ் என்னைப் பார்த்து விட்டதால், சட்டையைக் கழற்றினேன். ஏன்சட்டையின்றி உள்ளாய் எனக் கேட்டதற்கு புழுக்கமாக உள்ளது என அவரிடம் பதில்சொன்னேன். பின்னர், எனது அறைக்குச் சென்று அங்கிருந்த சட்டையை எடுத்துக்கொண்டு தப்பி விட்டேன்.
பின்னர் தூத்துக்குடிக்குச் சென்று டாலர் பணத்தை மாற்றிக் கொண்டேன். ஹேர் ஸ்டைலைமாற்றிக் கொண்டு ஊட்டி வந்தேன். இங்கு ஒரு ஓட்டலில் வேலை பார்த்தேன். இந்தஓட்டலுக்கு அருகில் உள்ள ஒரு பாங்கில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டேன். இந்தக்கொள்ளைக்கு பின்னர் செட்டிலாகி விடலாம் என எண்ணினேன். ஆனால் அதற்குள்போலீசில் மாட்டிக் கொண்டேன் என்றார்.
-
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications