பார்வதி ஷா கொலை வழக்கு .. மைத்துனர் அப்பீல்
சென்னை:
பாண்டிச்சேரி வைர வியாபாரி மனைவி பார்வதி ஷா கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற, முக்கியக் குற்றவாளியான அவரது மைத்துனர் கமல்ஷா சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
அந்த மேல் முறையீட்டு மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
எனது அண்ணி பார்வதி ஷா கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் என்னை முக்கியக் குற்றவாளியாகச் சித்தரித்து, தூக்குத் தண்டனை விதித்துள்ளனர்.
பாண்டிச்சேரி முதன்மை நீதிபதி ஈ.வி.குமார் இவ்வழக்கை முறையாக விசாரிக்காமலேயே யூகத்தின் அடிப்படையில் தீர்ப்புக் கூறியுள்ளார். இந்தத் தண்டனைமிகவும் கடுமையானதாக உள்ளது. இதனால் இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் மறுபடியும் தீர ஆராய்ந்து தீர்ப்புக் கூற வேண்டும் என்று மனுவில்குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் ஜூலை 14 ம் தேதி வைரவியாபாரி ஷா வின் மனைவி பார்வதி ஷா அவரது மைத்துனர் கமல் ஷா வால் கற்பழித்துக் கொலைசெய்யப்பட்டார். இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளியான கமல் ஷா மற்றும் அவரது தாய் பத்மாவதி ஷா ஆகியோர் மீது வழக்குத்தொடரப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 28 ம் தேதி இந்த வழக்கு பாண்டிச்சேரி முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது வழக்கை விசாரித்த நீதிபதி ஈ.வி.குமார் கமல்ஷா வுக்குத் தூக்குத் தண்டனையும், பத்மாவதி ஷா வுக்கு, இரண்டு வருடக் கடுங்காவல் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தார் என்பது நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications