போட்டியிலிருந்து வாபஸ் இல்லை: ஜிதேந்திர பிரசாத்
சென்னை:
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிலிருந்து வாபஸ் பெற மாட்டேன் என்று ஜிதேந்திரப் பிரசாத் சென்னையில் வியாழக்கிழமை நிருபர்களிடம்தெரிவித்தார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சோனியா காந்தியை எதிர்த்துப், போட்டியிடும் ஜிதேந்திரப் பிரசாத் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம்செய்து ஆதரவு திரட்டுகிறார்.
முதல்கட்டகமாக, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்ட முடிவு செய்தார். அதன்படி அவர் வியாழக்கிழமை சென்னை வந்தார்.
சென்னை விமான நிலையத்திலிருந்து அவர் ஸ்ரீபெரும்புதூருக்குச் சென்று அங்கு ராஜீவ்காந்தி நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
மீண்டும் சென்னை திரும்பிய அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
காங்கிரஸ் கட்சியை வளர்க்க வேண்டும். மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். சோனியா காந்தியை எதிர்க்கவேண்டும் என்பது எனது எண்ணமல்ல.
மக்களிடையே பாரதிய ஜனதாக் கட்சி வலுவிழந்த நிலையில் உள்ளதால், காங்கிரஸ் தனது நிலையைப் பலப்படுத்தி ஆட்சியைப் பிடித்து விடலாம்.
காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி ஜனநாயகம் இருக்க வேண்டும். இதனால்தான் தலைவர் போட்டியில் மனுத்தாக்கல் செய்துள்ளேன்.
காங்கிரஸ் கட்சியில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், எல்லாரும் ஒன்று சேர்ந்து பாடுபட்டால் நிச்சயம் வெற்றி பெற முடியும். காங்கிரஸ் கட்சியில்உள்ளவர்கள் அனைவரும் கட்சியைப் புதுப்பிக்க வேண்டுகிறார்கள். அந்த ரீதியில்தான் நான் சோனியா காந்தியை எதிர்த்து போட்டியிடுகிறேன்.
அதே நேரத்தில் சோனியா காந்தியுடன் கடைசி நேரத்தில், பேச்சுவார்த்தை நடத்தி சமாதானமாகப் போய்விடுவேன் என்ற பேச்சுக்கே இடமில்லை.
தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் யாரையும் பார்க்க முடியவில்லை. அதனால் பத்திரிக்கைகள் மூலம் எனக்கு ஆதரவு கொடுக்குமாறுவேண்டுகோள் விடுத்து வருகிறேன்.
ஆரம்பத்திலிருந்தே நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறேன். கட்சியிலிருந்து போய்விட்டு மீண்டும் கட்சியில் சேர்ந்தவன் அல்ல. கட்சியில் கடுமையானமாற்றம் தேவைப்படுகிறது. அதனால் அகில இந்தியத் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்றார் ஜிதேந்திர பிரசாத்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications