உலக வர்த்தகக் கழக ஒப்பந்தத்தை ஏற்கவேண்டாம் .. விவசாயிகள்

Subscribe to Oneindia Tamil

மார்க்சிஸம் ஒரு குழப்பிஸம்

புனரபி ஜனனம், புனரபி மரணம், புனரபி ஜனனி ஜடரே சயனம் - மீண்டும் பிறப்பு, மீண்டும் இறப்பு, மீண்டும் ஒரு தாயின் வயிற்றில் உறக்கம் - இந்ததத்துவத்தை யார் நம்புகிறார்களோ, இல்லையோ மார்க்சிஸ்ட்கள் நம்புகிறார்கள்.

பிறந்து, இறந்து மீண்டும் பிறந்து இறந்து விட்ட மூன்றாவது அணி, இப்பொழுது இந்திய அரசியல் தாயின் வயிற்றில் உறங்குவதாகவும், அது மீண்டும்பிறப்பு எய்தும் என்றும் மார்க்சிஸ்ட்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

மார்க்சிஸ்ட்களுக்கு பா.ஜ.க.வையும் எதிர்க்க வேண்டும்: காங்கிரசையும் ஒப்புக் கொள்ள முடியாது. ஆனால், சில மாநிலங்களில் காங்கிரசையும் ஒப்புக்கொள்ள முடியும். மத்தியில் சில சூழ்நிலைகளில் ஒப்புக் கொள்ள முடியும். ஆனால் மொத்தத்தில் ஒப்புக் கொள்ள முடியாது. இப்படி காங்கிரசைப் பற்றி, ஒரு தெளிவானநிலையில் மார்க்சிஸ்ட்கள் இருக்கிறார்கள்.

மத்திய சர்க்கார் தன் சொல்படி கேட்டு நடக்கிற அரசாக வர வேண்டும் என்ற ஆசை மார்க்சிஸ்ட்களுக்கு அபரிமிதமாக உண்டு. அதே சமயத்தில் அந்தசர்க்காரில் தாங்கள் பங்கெடுத்துக் கொண்டால், சரிப்பட்டு வராது என்ற கருத்தும் உண்டு.

ஏனென்றால் இன்று பொருளாதார தாராளமயத்தின் காலம். இது கம்யூனிஸ்ட்களுக்கு ஒத்துவராத பருவம். அரசில் பங்கேற்காமல் இருந்தால் நாங்கள்என்ன செய்வது? எங்களுக்கு இந்தப் பொருளாதார தாராளமயத்தில் உடன்பாடு இல்லை.

ஆனால் அரசில் பங்கேற்றிருக்கிற அத்தனை கட்சிகளும் அதை ஒப்புக் கொள்கின்றன. நாங்கள் மட்டும் வெளியே இருந்து எதிர்த்து என்ன பயன்?என்று சொல்லி, தாராள மய கறை தங்கள் மீது படியாமல் பார்த்துக் கொள்ளலாம். அரசில் பங்கேற்றால், இப்படி நழுவுகிற வாய்ப்பு இருக்காது. இதுஒரு புறம்.

மற்றொரு புறத்தில் மத்திய அரசில் பங்கேற்றால் கட்சி வளரும், என்று ஒரு நம்பிக்கையும் மார்க்சிஸ்ட்களுக்கு இருக்கிறது. அதனால் சென்ற முறைவாய்ப்பு கிடைத்த பொழுது மத்திய அரசில் பங்கேற்காதது தவறு என்றும், மீண்டும் அந்தத் தவறைச் செய்து விடக்கூடாது என்றும் மார்க்சிஸ்ட்கள்இப்பொழது கூடி முடிவு செய்திருக்கிறார்கள்.

இதனால் அடுத்த முறை வாய்ப்பு கிட்டினால் நிச்சயமாக மத்திய அரசில் மார்க்சிஸ்ட்கள் பங்கேற்பார்கள் என்று சொல்ல முடியாது. அதற்குள்அவர்களுடைய நிலை மாறினாலும் மாறலாம்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், மார்க்சிஸ்ட்கள் மூன்றாவது அணிக்கு மீண்டும் ஒரு பிறப்பு ஏற்படாதா என்று அங்கலாய்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஜனதா தளம் போன இடம் தெரிவில்லை ; மூன்றாவது அணி என்ற ஒன்று வந்தால், அதில் இடம் பெறக் கூடிய மாநிலக் கட்சிகளோ ஒன்றையொன்றுவிரோதித்துக் கொண்டு நிற்கின்றன. ஆகையால் மூன்றாவது அணியின் பிறப்பு ஒரு சிசேரியன் ஆப்பரேஷன் நடந்தால் தான் முடியும். இருந்தாலும் கூடமார்க்சிஸ்ட்கள் ஏன் இவ்வளவு முனைந்திருக்கிறார்கள்? காரணம் இருக்கிறது.

இப்பொழுதே மூன்றாவது அணி என்று பேசத் தொடங்கினால், பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றிருக்கிற சில கட்சிகளுக்கு பா.ஜ.க.வை மிரட்டுகிறவாய்ப்புகள் கூடும்.

சந்திரபாபு நாயுடு போன்று, மத்தியிலும் ஒரு கண் வைத்திருக்கிற சில தலைவர்கள், ஆளும் கூட்டணியில் பெரிய பிரச்சனை வருகிற போது மூன்றாவது அணிபேச்சுக்குச் செவி சாய்த்தாலும் சாய்க்கலாம்.

பா.ஜ.க. அரசில் பிரதமர் மாற்றம் ஏற்படுகிற நிலை தோன்றி விட்டால், அப்பொழுது பிரச்னைகளுக்கு நிறையவே இடம் இருக்கும். அபிப்ராயபேதங்களுக்கு ஏற்ற சூழ்நிலை உருவாகும். அப்பொழுது ஒரு வேளை மூன்றாவது அணி, அரைகுறைப் பிரசவமாகப் பிறந்து விடக் கூடிய வாயப்பு உண்டு.

இந்த சபலங்களினால் உந்தப்பட்டுதான், மார்க்சிஸ்ட்கள் மீண்டும் மூன்றாவது அணியைப் பற்றிப் பேசத் தொடங்கி இருக்கிறார்கள். அதனால்தான் முன்புசெய்தது தவறு என்று இப்போது கூறுகிறார்கள்.

காங்கிரஸ் எதிர்ப்பை ஒரு புறத்தில் காட்டிக் கொண்டு, மற்றொரு புறத்தில் பா.ஜ.க.வை விட, காங்கிரஸ் மேல் என்றும் பேசுகிறார்கள். மொதத்தில்மார்க்சிஸ்ட்கள் குழப்பிஸ்ட்கள். அவர்களுடைய மார்க்சிஸம், குழம்பிஸம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+