பெர்னாட்ஷா சொன்னது சரியாப் போச்சே .. கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கிரிக்கெட் ஆட்டத்தில் பங்குபெற்று, சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள், கிரிக்கெட் மைதானத்தை விட்டேஓட்டமெடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கருத்துத் தெரிவித்துள்ளார்.

கருணாநிதியை முதல்வராக, கவிஞராக, எழுத்தாளராக, இலக்கியவாதியாக மட்டுமே அறிந்த பலருக்கு அவர் ஒருகிரிக்கெட் ரசிகர் என்பது தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை. சமீபத்திய கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங், சி.பி.ஐ.விசாரணைகளால் அவர் வருத்தத்தில் உள்ளார்.

மேட்ச் பிக்ஸிங் புகார் குறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்து:

கிரிக்கெட் போட்டிகள் நடக்கும்போது சிக்சர், ஸ்டம்பிங், போல்டு, ரன்அவுட், கேட்ச், பவுண்டரி, வீழ்த்தப்பட்டவிக்கெட்டுக்களின் எண்ணிக்கை ஆகியவை வானொலி மூலம் அந்தக் காலத்தில் தெரிவிக்கப்படும்.

கிரிக்கெட் ரசிகர்கள் ஒவ்வொருவரும் வானொலிப் பெட்டியுடன்தான் அந்தக் காலங்களில் காட்சியளிப்பார்கள்.என் அருமை நண்பரும், தமிழக முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர். எப்போதும் கிரிக்கெட் நடைபெறும்நாட்களில் வானொலிப் பெட்டியைத் தன் காதோரம் வைத்துக் கேட்டுக் கொண்டிருப்பார். அவரது முகபாவங்களிலிருந்தே என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.

ஆனால், அந்த சமயத்தில் எனக்கு கிரிக்கெட் விளையாட்டில் அவ்வளவாக ஈடுபாடு இல்லை. கிரிக்கெட்டேவேண்டாம் என்று பிடிவாதமாக இருந்த நான், விளையாடிய வீரர்கள் யார்? பந்தைக் கேட்ச் செய்தவர் யார்? யார்பீல்டிங் செய்வதில் திறமை காட்டினார்? என்றெல்லாம் எவரேனும் கூறும் போது, அதைக் காதில் வாங்குவது கூடவீண் வேலை என்று கருதிக் கொண்டிருந்தேன்.

ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியென்றால் அதில் தனியொரு மோகம்கொண்ட நிலைக்கு ஆளானேன்.

1969 ம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டபோது, சென்னையில் மேற்கிந்தியத் தீவுகள்அணிக்கும், இந்திய அணிக்கும் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியைத் துவக்கி வைக்கும் பொறுப்பைநிறைவேற்ற வேண்டியதாயிற்று. என்னுடன் மறைந்த அமைச்சர் நெடுஞ்செழியனும் வந்திருந்தார். கிரிக்கெட்விளையாட்டுக்கள் பற்றிய விவரங்கள் அனைத்தையும் எனக்குத் தெளிவாக விளக்கியவர் நெடுஞ்செழியன்.

இதையடுத்து நான் கிரிக்கெட் விளையாட்டின் தீவிர ரசிகனானேன். போட்டி நடக்கும் மைதானத்துக்கே சென்றுபோட்டிகளைக் கண்டுகளித்தேன். அப்புறம் தொலைக்காட்சி வசதி வந்ததும், அதில் காட்டப்பட்ட கிரிக்கெட்போட்டிகளைக் கண்டேன்.

ஒரு நாளைக்கு சுமார் 6 மணி நேரத்துக்குமேல் டி.வி.முன் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை ரசிக்கும் பழக்கம்என்னைத் தொற்றிக் கொண்டது.

கிரிக்கெட் குறித்து பெர்னாட்ஷா, 11 முட்டாள்கள் ஆடுகிறார்கள். அதை 11 ஆயிரம் முட்டாள்கள் கண்டுகளிக்கிறார்கள் என்று கூறியிருந்தார். அவர் கூறியிருந்த 11 ஆயிரம் முட்டாள்களில் நானும் ஒரு முட்டாளாகிவிட்டேன்.

பெர்னாட்ஷாவின் வாசகங்கள் தற்போது, ஒப்புக் கொள்ளக் கூடிய வாசகமாகவே ஆகி விட்டது. கிரிக்கெட்ஆடுகிறேன் என்ற பெயரில் திரைமறைவில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். தோற்றுப் போகிறேன். இவ்வளவுதொகை கொடு என்று லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணம் பெற்று தேசத் துரோகம் செய்து விட்டார்கள்.இவர்கள் துரோகிகள்.

கோடி கோடியாக குவித்து நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் அவமானம் தேடித் தந்தவர்கள். இன்னமும் தங்களைஉத்தம புத்திரர்களாகக் காட்டிக் கொண்டு, ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தச் சூதாட்டக்காரர்களின் கையில் இதுவரை இருந்தது கிரிக்கெட் மட்டையல்ல. டாலரும், பவுண்டும் உறிஞ்சியஅட்டை என்பது தெளிவாகி விட்டது.

கிரிக்கெட் மைதானத்தை விட்டே இவர்கள் ஓட்டமெடுக்க வேண்டும். இவர்கள் நீடித்தால் இந்த அரியவிளையாட்டின் புகழே அவுட் ஆகி விடும் என்றார் முதல்வர் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+