சாலையில் எண்ணெய் ஆறு.. அலைமோதிய பொது ஜனம்
கோவை:
கோவை அருகே தறிகெட்டு ஓடிக் கவிழ்ந்த எண்ணெய் டேங்கர் லாரியிலிருந்துதேங்காய் எண்ணெயைப் பொதுமக்கள் குடம் குடமாகப் பிடித்துச் சென்றனர்.
ஈரோட்டிலிருந்து கேரளாவில் உள்ள எர்ணாகுளத்திற்கு ஒரு டேங்கர் லாரி சென்றுகொண்டிருந்தது. இதில் 12 ஆயிரம் லிட்டர் தேங்காய் எண்ணெய் இருந்தது.
லாரி சூலூர் அருகே உள்ள காமாட்சிபுரம் பிரிவு என்ற இடத்திற்கு வந்தபோதுதறிகெட்டு ஓடியது. திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்தபள்ளத்தில் கவிழ்ந்தது.
இதையடுத்து கேபினில் இருந்த டிரைவர் வில்சன் மற்றும் கிளீனர் ராஜேஷ்ஆகியோரைப் பொதுமக்கள் மீட்டனர். அதே சமயம், கவிழ்ந்த லாரியில் ஒரு ஓட்டைஏற்பட்டது. இதையடுத்து, தேங்காய் எண்ணெய் கொட்டத் தொடங்கியது. இதையறிந்தபொதுமக்கள் தேங்காய் எண்ணெயை குடங்களை எடுத்து வந்து பிடிக்கத்தொடங்கினர்.
பலர் தங்கள் கைக்கு கிடைத்த பாத்திரத்தை எடுத்து வந்து பிடித்தனர். பலர் 5 லிட்டர்கேன், 10 லிட்டர் கேன் என கேன்களை வாங்கி வந்து பிடித்துக் கொண்டிருந்தனர்.
சம்பவம் குறித்து சூலூர் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து வந்துபார்த்தனர். அப்போது பொதுமக்கள் கூட்டமாக, எண்ணெய் பிடிக்க அடிதடியில்இறங்கியிருந்தனர். இவர்களைக் கலைத்து விட்டு, போலீசார் எண்ணெய் கசிவைஅடைக்க முயற்சி மேற்கொண்டனர்.
இந்த சம்பவத்தால், ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தேங்காய் எண்ணெய் வீணானது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications