அசார் கொடும்பாவி எரிப்பு
ஹைதராபாத்:
அசாருதீனின் சொந்த ஊரான ஹைதராபாத்தில் அவரது உருவ பொம்மையை அவர் படித்த கல்லூரியின் மாணவர்கள் எரித்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் முகமது அசாருதின். இவர் பணம் பெற்றுக் கொண்டு பல போட்டிகளில் இந்திய அணியின் தோல்விக்காகவிளையாடியதாக இவர் மீது புகார் கூறப்பட்டு வந்தது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான மனோஜ் பிரபாகர் அசாருக்கு எதிராக கடுமையான குற்றங்களை சுமத்தி வந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அசாருதீனுக்கு கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்பு உண்டு என அறிக்கை வெளியிட்டுள்ளது. இவர் மீதுகுற்றம் சுமத்தி வந்த மனோஜ் பிரபாகருக்கும் கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக சி.பி.ஐ. தெரிவித்திருக்கிறது.
அசாருதினுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பா.ஜ.க. , சிவசேனா தொண்டர்கள் இவரதுகொடும்பாவியை கொளுத்தி வந்தனர்.
ஹைதராபாத்தில் உள்ள நிஜாம் கல்லூரியில் தான் அசாருதீன் படித்தார். தற்போது இந்தக் கல்லூரியில் படித்து வரும் ஏ.பி.வி.பி. இயக்க மாணவர்களி நகரின்முக்கியப் பகுதியான பஷீர்பாக் பகுதியில் கும்பலாக வந்து அசாருக்கு எதிராக கோஷம் எழுப்பி ஊர்வலமாக சென்று அம்பேத்கார் சிலைக்கு முன்பு அவர்கொடும்பாவியை எரித்தனர்.
அசாருதீன் எங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவர் என நாங்கள் பெருமைப்பட்டு வந்தோம். இப்போது அதை நினைத்து வெட்கப்படுகிறோம் எனபோராட்டம் நடத்திய மாணவர் தலைவர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications