குருநானக்கின் 531 வது பிறந்தநாள்
ஹசனாத்தால்(பாகிஸ்தான்):
சீக்கிய மதத்தைப் பரப்பிய குருநானக்கின் 531 வது பிறந்த நாள் வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதற்காக 13 நாடுகளிலிருந்து 3,500 க்கும் மேற்பட்டோர் பாகிஸ்தானுக்கு வந்துள்ளனர்.
இவர்களில் 2000 பேர் இந்தியா, கனடா, ஆப்கானிஸ்தான், பிரிட்டன், அமெரிக்கா, தாய்லாந்து பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இதுகுறித்து பாகிஸ்தான் குருத்துவாரா கமிட்டி கூறிய விவரங்கள்:
குருநானக்கின் பிறந்தநாளயொட்டி இங்கு வந்திருக்கும் சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து நான்கு நாட்கள் இங்கு தங்கி வழிபாடு நடத்துவார்கள்.பின்னர் அவர்கள் லாகூர் செல்வார்கள்.
இங்கு நடக்கும் நான்கு நாட்கள் பூஜையில் இரண்டாம் நாள் பக்தர்கள் அனைவரும் விரதம் கடைபிடிப்பார்கள். பின்னர் மூன்றாவது நாள் ஊர்வலமாகச்சென்று தங்களது விரதத்தை முடிப்பார்கள்.
குருநானக் பிறந்த இடமான ஹானாத்தால் பகுதியில் நவம்பர் 11 ம்தேதி சர்வதேச சீக்கியர்கள் மாநாடு நடத்த, சீக்கிய பக்தர்கள் திட்டமிட்டுள்ளனர்.இந்த மாநாட்டில் பாகிஸ்தான் அதிபர் ரபிக் தார்வார் கலந்து கொள்வார் என்று உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த வருடம் இந்தியா மற்றும் பிற நாடுகளிலிருந்து 10, 000 க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றுகுருத்துவாரா கமிட்டி தெரிவித்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications