இந்தியாவை வல்லரசாக ஆக்குவோம்.. பொன்.ராதாகிருஷ்ணன்
நாகர்கோயில்:
300 எம்.பி.க்கள் கொடுத்தால் இந்தியாவை வல்லரசாக்கிக் காட்டுவதாக மத்திய விளையாட்டுத்துறை மந்திரி பொன். ராதாகிருஷ்ணன்கூறியிருக்கிறார்.
நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் நல்ல ஆட்சிக்கு ஆதரவு தருமாறு கேட்டு தமிழகத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் பாரதிய ஜனதா கட்சிசார்பில் தாமரை யாத்திரை என்ற பெயரில் ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த யாத்திரை தொடங்கியது. ரத யாத்திரை மேல சங்கரன் குழிக்கு வந்தபோது மத்திய அமைச்சர் பேசினார். அவர்பேசுகையில், காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற பல ஊழல்கள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டு தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.
கிரிக்கெட்டில் ஊழல் செய்தவர்கள் சி.பி.ஐ. மூலம் கண்டு பிடிக்கப்பட்டு மக்களுக்கு அடையாளம் காட்டப்பட்டுள்ளனர் .நரசிம்மராவ் போன்றவர்கள்சிறைக்கு சென்றுள்ளனர்.
காங்கிரஸ் ஆட்சியில் 10 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது. இந்த கடனுக்கான வட்டி மட்டுமே ஆயிரம் கோடி ரூபாய்கட்டப்படுகிறது.
விளையாட்டுத்துறையில் இழப்பு இருந்தாலும் அடுத்த ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கங்களை வெல்வோம்.
வாஜ்பாய் ஆட்சியில் தான் தீவிரவாதங்கள் ஒடுக்கப்பட்டுள்ளன. நாங்கள் செய்த சாதனைகளைக் கூறிதான் மக்களிடம் ஓட்டு கேட்போம். எம்.ஜி.ஆர்.ஆட்சி, காமராஜ் ஆட்சி எனத் கூறி கேவலமாக அரசியல் நடத்துபவர்கள் போல் கேட்காமல் வாஜ்பாய் தலைமையில் நல்லாட்சி தருகிறோம்என்றுதான் மக்களிடம் ஓட்டு கேட்போம்.
ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்தில் அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியில் 50 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம். எங்களுக்கு 300எம்.பி.க்களை தந்தால் இந்தியாவை வல்லரசாக மாற்றி காட்டுகிறோம். வரவிருக்கும் தேர்தலில் தாமரை சின்னத்திற்கோ அல்லது தாமரைகூறும் சின்னத்திற்கோ வாக்களியுங்கள் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications