அடுத்த அமெரிக்க அதிபரை நீதிமன்றம் தேர்ந்தெடுக்கும்!
Subscribe to Oneindia Tamil
புளோரிடா:
அடுத்த அமெரிக்க அதிபரை புளோரிடா நீதிமன்றம் தான் முடிவு செய்யும் என்ற நிலை உருவாகி வருகிறது.
புளோரிடா மாகாண சட்டப்படி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டவர், வாக்காளர்,வரி செலுத்தும் குடிமகன் ஆகியோரில் யார் வேண்டுமானாலும் வழக்குத் தொடர முடியும்.
தள்ளுபடி செய்யப்பட்ட வாக்குகள், கள்ள ஓட்டுகள், குறைவான வாக்கு வித்தியாசம் என பல காரணங்களைக்காட்டி இந்த வழக்குகளைத் தொடர முடியும்.
சரியாக முத்திரை செலுத்தாத 19,000 வாக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் இதை எதிர்த்து வழக்குத்தாக்கல் செய்யப்பட்டால், அதிபர் தேர்தலின் முடிவை நீதிமன்றம் தான் முடிவு செய்தாக வேண்டும்.
அப்படி ஒரு சூழநிலை உருவாவதற்கான வாய்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications