சட்டசபையில் கூச்சல்: அதிமுக வெளிநடப்பு
சென்னை:
தமிழக சட்டசபையின் குளிர்காலத் கூட்டத்தொடரின் நான்காவது நாளான வெள்ளிக்கிழமை அதிமுகஉறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
வெள்ளிக்கிழமை சட்டசபையின் ஜீரோ நேரத்தில் அதிமுக எம்.எல்.ஏ.சுந்தரம், அ.தி.மு.க. வை எதிர்த்துதி.மு.க.வினர் நடத்திய கண்டனப் பொதுக் கூட்டத்தில் அமைச்சர் முல்லைவேந்தன் ஜெயலலிதாவைக் குறித்தும்,அ.தி.மு.க. வைக் குறித்தும் அவதூறாக பேசினார்.
இதைக் கண்டித்த அ.தி.மு.க. மகளிர் அணியைச் சேர்ந்த காவேரி, சத்யவாணி மற்றும் எம்.ஜி.ஆர் மன்றத்தைச்சேர்ந்த பழனிமுருகன் ஆகியோரை முல்லைவேந்தன் மேடையிலிருந்து இறங்கி வந்து தாக்கியிருக்கிறார்.உடைகளையும் கிழித்துள்ளார்.
இந்த சம்பவத்தை போலீசார் பார்த்துக் கொண்டிருந்தனர். தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தவிஷயம் உடனடியாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றார்.
இதற்கு சபாநாயகர் பழனிவேல்ராஜன் அனுமதி மறுத்தார். ஆனால் அதிமுக எம்.எல்.ஏ.சுந்தரமோ மீண்டும்,மீண்டும் இப்பிரச்சனை குறித்து பேச வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அப்போது, மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி எழுந்து, சபாநாயகர் அனுமதி மறுத்தபின், இதுகுறித்துக்கூச்சலிடுவது நாகரீகமல்ல என்றார். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து கூச்சலிட்டனர். பின்னர் அவையிலிருந்துவெளிநடப்புச் செய்தனர்.
முன்னதாக, அ.தி.மு.க பெண் தொண்டர்களை அவமானப்படுத்திய அமைச்சர் முல்லை வேந்தனை கைதுசெய்யக்கோரி 14-ம் தேதி தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு அ.தி.மு.க. உண்ணாவிரதப்போராட்டமும், ஆர்பாட்டமும் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவிப்புவிடுத்துள்ளார்.
யு.என்.ஐ.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications