குஜராத்தில் மோசடி செய்த தமிழக வியாபாரி கைது

Subscribe to Oneindia Tamil

பொள்ளாச்சி:

குஜராத்தில் பஞ்சு வாங்கி மோசடி செய்த பொள்ளாச்சியைச் சேர்ந்த தொழிலதிபரை குஜராத் போலீசார் துப்பாக்கிமுனையில் கைது செய்தனர்.

பொள்ளாச்சியில் பஞ்சு வியாபாரி ஒருவர், குஜராத்தில் பஞ்சு வாங்கி, தமிழகத்தில் விற்று வந்தார். இவர் கடந்த சிலமாதங்களுக்கு ன்பு குஜராத்திற்குச் சென்று அங்கு பல வியாபாரிகளிடம் பஞ்சு வாங்கியுள்ளார். பின்னர் இதற்குப்பணம் கொடுக்கவில்லை. மாறாக ரூ. 20 லட்ச ரூபாய்க்கு செக் ஒன்றைக் கொடுத்து விட்டு வந்தார்.

இந்த செக்கை வியாபாரிகள் வங்கியில் செலுத்தினர். ஆனால், இவரது கணக்கில் பணம் இல்லை என செக்திரும்பியது. இதனால் ஆத்திரமடைந்த குஜராத் வியாபாரிகள், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் பொள்ளாச்சி வியாபாரிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்த வாரண்ட்டை பெற்றுக்கொண்ட குஜராத் போலீசார், ஒரு வியாபாரியுடன் பொள்ளாச்சி வந்தனர்.

இங்கு அந்த தொழிலதிபரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அவரிடம் பேசிய குஜராத் வியாபாரி வெளியூர் செல்ல கார்வேண்டும், வாடகை டாக்சி ஏற்பாடு செய்து தாருங்கள் எனக் கேட்டார்.

இதையடுத்து, பஞ்சு வியாபாரி, காரை எடுத்துக் கொண்டு பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள டாக்சி ஸ்டாண்டிற்குவந்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் அவரைத் துப்பாக்கி முனையில் வளைத்துப் பிடித்து கைது செய்தனர்.இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பஞ்சு வியாபாரி பணத்திற்காகக் கடத்திச் செல்லப்பட்டார் எனபோலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், விசாரித்தபோது குஜராத் போலீசார் அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர் எனத் தெரியவந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+